SINGAPORE: Bukit Batok-ல் இரண்டு இடங்களில் 14 வயது சிறுமியும் அவளது தாத்தாவும் (84) இறந்து கிடந்ததாக சிங்கை போலீஸார் நேற்று (ஜூன் 25) தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் புக்கிட் பாடோக் வெஸ்ட் அவென்யூ 6 இல் உள்ள housing block-ன் அடிவாரத்தில் சிறுமி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இந்த மரணம் குறித்து வியாழன் மாலை 5.50 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், சந்தேகத்திற்கு இடமாக எதுவும் அப்போது புலப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், அன்று மாலையே சரியாக 5.55 மணிக்கு, புக்கிட் பாடோக் ஸ்ட்ரீட் 31ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மற்றொரு இயற்கைக்கு மாறான மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
84 வயதான நபர் ஒருவர் மார்பில் காயங்களுடன் அந்த குடியிருப்பில் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த முதியவர் Mr Teo Ah Nee என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில், அந்த இளம்பெண் 84 வயது முதியவரின் பேத்தி என்றும், இருவரும் ஒரே Unit-ல் வசித்து வந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தாத்தா ஒரு இடத்திலும் பேத்தி ஒரு இடத்திலும் இறந்து கிடந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வழக்குகளுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த வியாழன் மாலை 6 மணிக்கு பிளாக் 115 புக்கிட் பாடோக் வெஸ்ட் அவென்யூ 6 (Bukit Batok West Avenue)-ல் இருந்தும், மாலை 5.55 மணிக்கும் பிளாக் 363 புக்கிட் பாடோக் ஸ்ட்ரீட் 31-ல் இருந்தும் உதவிக்கான அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
இறந்து கிடந்த அந்த சிறுமி Secondary 2 வகுப்பு படித்து வந்துள்ளார். வீட்டில் அவர் தனது பெற்றோர் மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்திருக்கிறார்.
இரு வழக்குகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.