TamilSaaga

“சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் பயணிகள்” : PCR மற்றும் RT-PCR சோதனைக்கு குறைக்கப்பட்ட கட்டணம்

தற்போது Omicron என்று அறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் ஒன்றின் பரவல் எதிரொலியாக, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து சென்னை வருகின்ற பயணிகளுக்கு தற்போது கடு்ம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் உருமாறிய புதிய பெருந்தொற்று வைரஸான ஓமைக்ரான் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவக் கூடும் என்பதால் பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள் : தடைகள் பல தாண்டி சாதித்த தமிழன் ராமமூர்த்தி

ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பா யூனியன் நாடுகள் தனிப்பட்ட வகையில் இதே தடையை விதித்துள்ளது. தென்னாபிரிக்க பயணிகளுக்கு மற்ற அண்டை நாடுகளிலும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பே இந்தியா வந்தவர்களையும் சோதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய கண்டம் உள்பட, லண்டன், சவுத் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், பிரேசில், சீனா, போட்ஸ்வானா, கானா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, டான்சானியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்குபவர்களிடம் PCR அல்லது RT-PCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த PCR சோதனைக்கு முன்னதாக சுமார் 700 இந்திய ரூபாயும், RT-PCR சோதனைக்கு சுமார் 3400 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக AAI தெரிவித்தது. இதில் PCR சோதனை முடிவுகள் பெற 5 மணிநேரத்திற்கு மேலே ஆகும் என்றும் RT-PCR சோதனை முடிவு 1 மணிநேரத்திற்குள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் PCR சோதனைக்கு 100 ரூபாயும், RT-PCR சோதனைக்கு 500 ரூபாயும் விலையை குறைத்துள்ளது சென்னை விமான நிலையம். ஆகையால் இனி மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் PCR சோதனைக்கு 600 ரூபாயும், மேலும் RT-PCR சோதனைக்கு 2900 ரூபாயும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts