சிங்கப்பூரில், கடந்த ஆண்டு வேலைக்கு ஆட்களை நிரப்ப பல நிறுவனங்களில் அதிக காலம் எடுத்துக் கொண்டனர் என்றும் இது முந்தைய ஆண்டை விட அதிகம் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (ஏப்ரல் 1) அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இப்போது சிங்கையில் உருவாகியுள்ள அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் குறித்தும் MOM அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த டிசம்பரில், பொருளாதார மீட்சி ஏற்பட்டதால், வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 117,100 என்ற சாதனையை எட்டியது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக நிரப்பப்படாத பணியிடங்களின் விகிதம் 2020ல் 27 சதவீதத்தில் இருந்து 2021ல் 35 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று MOM கூறியுள்ளது.
தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் டெக்னீசியன் (PMET) பணிகளுக்கும் மற்றும் PMET அல்லாத பணிகளுக்கும் என இந்த இரண்டு துறையிலும் வேலைக்கு ஆட்களை நிரப்ப அதிக கால நேரம் ஆனது.
PMET – professional, managerial, executive, and technical
MOM ஆய்வில், மொத்தம் 1,809,900 பணியாளர்களைக் கொண்ட 14,340 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், முதலாளிகளுக்கு தேவைப்படும் முதல் மூன்று PMET வேலைப் பிரிவுகள் என்னென்ன தெரியுமா?
commercial and marketing sales executives
software
web and multimedia developers
என்று கண்டறியப்பட்டது. இந்த மூன்று பிரிவில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தான் நிறுவனங்கள் திண்டாடி இருக்கின்றன.
அதுவே, PMET அல்லாத பணி பிரிவுகளில் பார்த்தோமெனில் கட்டுமானத் தொழிலாளர்கள், கடை விற்பனை உதவியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்களின் தேவை அதிகமாக இருந்தது.
இதுகுறித்து மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறுகையில், “வரவிருக்கும் மாதங்களில் தொழிலாளர் பற்றாக்குறை குறைய வேண்டும். முதலில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, PMET அல்லாத வேலைகளில் அதிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.