TamilSaaga

சிங்கப்பூரில் 67 வயதில் விந்து விரைவில் வெளியேறுவதைத் தடுக்க… S$17,000 பணத்தை வாரி இறைத்து ஏமாந்த முதியவர் – இளைஞர்களுக்கு அட்வைஸ்

ஆசை யாரை விட்டது… இங்கு நம் சிங்கப்பூரில் ஒரு முதியவர் தனது ஆசையால் S$17,000 பணத்தை இழந்திருக்கிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த லின் அவர்களுக்கு வயது 67. இவருக்கு உடலுறவின் போது, மிக விரைவாக விந்து வெளியே வெளியேறுவது வழக்கமாக இருந்ததால், அதனைத் தடுக்க சிகிச்சை எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

இந்த சூழலில், விந்து முன்கூட்டியே வெளியே தள்ளப்படுவதை தடுக்கும் விதமான மருந்துகள் சிலவற்றை ஆன்லைனில் பார்த்து, அதனை அதிகம் வாங்கியிருக்கிறார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தில், S$17,000 தொகையை இதற்காக செலவு செய்திருக்கிறார். அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தொடர்ச்சியாக ஐந்து மாதங்களில் இந்த தொகையை செலவு செய்திருக்கிறார்.

ஆனால், அவர் ஆன்லைனில் வாங்கிய மருந்துகளால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த வேதனையை அவர் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.. Terminal 1 மற்றும் 3ல் அலைமோதிய மக்கள் கூட்டம் : கடைகளில் ஜோராக நடந்த விற்பனை – பிறந்தது நம்பிக்கை!

தான் ஏமாற்றப்பட்டது குறித்து பேசிய லின், “எனது அனுபவத்தில் சொல்கிறேன். இதுபோன்ற மருந்துகளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்ட நான் விரும்புகிறேன்.

வெளிநாட்டில் உள்ள ஒரு ஆலோசகரைத் தொடர்பு கொண்டு விந்து குறித்த எனது பிரச்னையை கூறிய போது தான், அவர் இது போன்ற மருந்துகளை எனக்கு அறிமுகம் செய்தார். அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் உடலுறவின் போது 20 நிமிடங்கள் வரை நிலைத்து நீடிக்கலாம் என்றார்.

இதற்கு நான் ஒப்புக்கொண்டு, S$420ஐக் கொடுத்துவிட்டு சில பாட்டில் மாத்திரைகளைப் வாங்கினேன். தொடக்கத்தில் அந்த மருந்துகள் சில தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், மீண்டும் விந்து உடனே வெளியேறுவது தொடர்கதையானது. இதனை அவரிடம் சொன்ன போது, வேறு தயாரிப்பு மருந்துகளை பரிந்துரைத்தார்.

இப்படி தொடர்ச்சியாக மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்தேனே தவிர, ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்போதுதான் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. ஒருக்கட்டத்தில் அந்த ஆலோசகரை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அப்போதுதான் அவரும் ஒரு போலி நபர் என்பதும், என் பிரச்சனைகளை பயன்படுத்தி முடிந்த வரை பணம் கறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

நான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம், இப்படி வீணாய் போய்விட்டது” என்று லின் வேதனையுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Jurong சந்திப்பு.. இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து : ஓட்டுநர் பலி – பலர் மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA), பாலியல் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் ஆன்லைனில் சுகாதாரப் பொருட்களை வாங்கும் போது பாதுகாப்பாக இருப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

“ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு” எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று HSA அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் தயாரிப்புகளைப் பற்றி “மிகைப்படுத்தி கூறுவது” உண்மையில் தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

எனவே, நுகர்வோர் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து பேசுவதே நல்லது. அறிமுகமில்லாத ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்கவும், சுகாதாரப் பொருட்களின் செயல்திறன் குறித்த தவறான கூற்றுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் HSA அறிவுறுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts