TamilSaaga

“சிங்கப்பூர் தீமிதி திருவிழா” : ஆன்லைன் மூலம் புக் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – பதிவு செய்ய லிங் உள்ளே

சிங்கப்பூரில் பிரசித்திபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது பெருந்தொற்றுக்கு எதிர்மறை சோதனை முடிவைக் காண்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஹிந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளனர். அதே போல் இந்த ஆண்டு தீமிதி திருவிழாவின் போது பக்தர்கள் எப்போதும் முகமூடி அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது ஹிந்து அறநிலைத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பங்கேற்பாளர்கள் அக்டோபர் 24ம் அன்று தெற்கு பாலம் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் வருடாந்திர நிகழ்வுக்கு முன்கூட்டியே இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி போடப்படாத பக்தர்கள் தங்கள் நிகழ்வு பங்கேற்பு ஆரம்பிக்கும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் -19 சோதனையிலிருந்து எதிர்மறையான முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்து அறநிலை வாரியம் (HEB) நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீமிதி திருவிழாவிற்கு முன்பதிவு செய்ய…

திரௌபதி அம்மனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் இந்த தீமிதி திருவிழாவில் பங்கேற்பார்கள். மேலும் அங்கபிரதக்ஷணம், மற்றும் கும்பிடுதண்டம் போன்ற சடங்குகளின் போதும் பக்தர்கள் முகமூடிகளை அணிய வேண்டும். மேலும் கோவிலால் வழங்கப்படும் பால்குடம் மற்றும் மாவிளக்குமட்டுமே அனுமதிக்கப்படும், பக்தர்களால் தயாரிக்கப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்படாது என்று HEB மேலும் கூறியது. இந்த சடங்குகளில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகண்டங்களை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட பாதை வழியாக ஒரு முறை மட்டுமே கோவிலை சுற்றி வர அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தங்களுக்கான முன்பதிவுகளை இந்த லிங்க் மூலம் பதிவு செய்யலாம். பால்குடம், அங்கபிரதக்ஷணம், மற்றும் கும்பிடுதண்டம் போன்ற அனைத்து முன் நிகழ்வுகளுக்கும் முன் ஆன்லைன் பதிவு தேவை. இந்த நடவடிக்கைகள் 1 அக்டோபர் 2021 முதல் தொடங்கும். முன் நிகழ்வுகளுக்கான பதிவு (கட்டம் 1) வரும் வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021 காலை 10 மணிக்கு திறக்கப்படும் இதில் பால்குடம், அங்கபிரதக்ஷணம் போன்ற பரிகாரங்கள் அடங்கும்.

மேலும் தீமிதி திருவிழாவில் பங்கேற்பதற்கான இரண்டாம் கட்ட பதிவு, நிலவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அக்டோபர் 2021 இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும்.

Related posts