TamilSaaga

சிங்கப்பூர் செல்ல Skilled டெஸ்ட் அடிச்சிருக்கீங்களா? ஃபெயில் ஆகிட்டா மீண்டும் டெஸ்ட் அடிக்க முடியுமானு கவலையா? இன்ஸ்ட்டியூட்டில் என்ன செய்வார்கள் தெரிஞ்சிக்க இத படிங்க

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு பல பாஸ்களில் வந்திருப்பார்கள். ஏமாறாமல் ஒரு அளவு சுமாரான கட்டணத்தில் சிங்கப்பூர் வர வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் அதிகாரப்பூர்வ டெஸ்ட் இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுத்து டெஸ்ட் எழுதுவார்கள். அதில் பாஸானதும், வரும் சான்றிதழை வைத்து சிங்கப்பூரில் வேலை தேடி வொர்க் பெர்மிட்டில் வருவார்கள்.

ஆனால் இதன் முதற்கட்டமாக இருக்கும் Skilled டெஸ்ட் முதற் படியில் இருந்து ஊழியர்களுக்கு போராட்டமே இருக்கும். நல்ல இன்ஸ்டியூட்டை கண்டுபிடிக்க வேண்டும். அது பிரபலமாக இருந்தால் தான் கோட்டா நிறைய கிடைக்கும். அப்போது தான் சேரும் இளைஞர்களால் விரைவில் மெயின் தேர்வு எழுத முடியும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..

தொடர்ந்து கஷ்டப்பட்டு 45 முதல் 60 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்வார்கள். நீங்கள் மெயின் தேர்வுக்கு செல்லும் போது முதலில் எழுத்து தேர்வும் அடுத்து பிராக்டிக்கல் தேர்வும் இருக்கும். இந்த தேர்வில் எழுத்து தேர்வு ரொம்பவே எளிதாக தான் இருக்கும். 25 கேள்விகள் இருக்கும் இதில் பெரும்பாலும் யாருமே ஃபெயில் ஆகவே மாட்டார்கள். அதனால் இதுகுறித்து நீங்கள் கவலைப்படவே தேவையில்லை.

அடுத்து Practical தேர்வு நடக்கும். இதற்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக வருவார்கள். நீங்கள் கேமராவால் கண்காணிக்கப்படுவீர்கள். இதனால் தைரியமாக ப்ராஜக்ட்டினை செய்யுங்கள். பதறும் போது நீங்கள் பூசியவை கழன்று விழுந்து விடலாம். அல்லது செட் செய்யப்பட்ட பைப் ஃபிட்டாகாமல் விழுந்து உங்களை மாட்டிவிடலாம்.

இப்படி ஆகும் போது உங்களை கண்காணிக்கும் மேற்பார்வையாளரிடம் மாட்டினால் மட்டுமே ஃபெயில் போட வாய்ப்பு இருக்கும். ஆனால் சிலர் இதையும் தெரியாமல் சமாளித்து புராஜெக்டினை முடித்த கதையெல்லாம் இருக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் ஊழியரா நீங்க… குடும்பத்துடன் தங்க ஆசையா? Dependent விசா எடுக்கலாம்… மிஸ்ஸாகும் பட்சத்தில் இதை கூட Follow பண்ணுங்க

நீங்கள் பெயில் ஆகிவிட்டால் உங்களுக்கு அடுத்த 2 வாரத்தில் மீண்டும் தேர்வில் ஏற்றி விடுவார்கள். மீண்டும் பிராக்டிக்கல் செய்து பாஸ் ஆகிவிடலாம். இந்த தகவல் எல்லாம் உங்களின் சான்றிதழில் இடம் பெறாது. பாஸாகி இருந்தால் அது மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக மூன்று முறை நீங்கள் டெஸ்ட் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தேர்வு எழுதும் போது 30000 முதல் 60 ஆயிரம் வரை மீண்டும் கேட்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்ஸ்டியூட்டிற்கு இன்ஸ்டியூட் மாறுபடும். இதுவே நீங்கள் சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்து பெயில் ஆகிவிட்டால் $500 சிங்கப்பூர் டாலர் மட்டுமே கட்டினால் போதுமானது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts