சிங்கப்பூரில் நடைபெற்ற டோட்டோ லாட்டரி குலுக்கலில், முதல் அதிர்ஷ்டசாலிக்கு 34 கோடி பரிசு விழுந்துள்ளது.
சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் கடந்த ஜன.6ம் தேதி நடைபெற்றது. இதில் Group 1 எனப்படும் முதல் பரிசை வென்றவருக்கு $5,521,126 சிங்கப்பூர் டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
சிங்கப்பூரின் பிரபலமான TOTO லாட்டரியின் குலுக்கல் வாரம் இருமுறை நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான முதல் குலுக்கலில் (ஜன.2) Group 1 ஜாக்பாட் பரிசான 714, 588 சிங்கப்பூர் டாலர்கள் தொகையை இருவர் வென்றிருந்தனர். இது இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாயாகும்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த 2வது குலுக்கலில் முதல் பரிசாக $5,521,126 சிங்கப்பூர் டாலர்கள் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் ஏறக்குறைய 34 கோடி ரூபாய் பரிசு என்பதால், எப்படியும் இருவருக்கு இந்த ஜாக்பாட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிங்கிளாக ஒரேயொரு ஆதிர்ஷ்டசாலி ஒட்டுமொத்த 34 கோடி ரூபாய் பரிசையும் வென்றுள்ளார்.
குரூப் 1 பரிசுக்கான Winning Number இதுதான்.
12 | 22 | 30 | 32 | 42 | 49 |
அதேபோல், குரூப் 2 எனப்படும் இரண்டாவது பரிசுக்கான தொகை 68,374 சிங்கப்பூர் டாலர்களை 17 நபர்கள் வென்றுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் 42 ரூபாயாகும்.
மேலும், குரூப் 3 எனப்படும் மூன்றாவது பரிசுக்கான தொகை 1,412 சிங்கப்பூர் டாலர்களை 566 நபர்கள் வென்றுள்ளனர்.
அடுத்த குலுக்கல் நாளை (ஜன.9) மாலை நடைபெற உள்ளது. இப்போதைக்கு அதன் ஜாக்பாட் பரிசாக $1,000,000 சிங்கப்பூர் டாலர் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.