TamilSaaga

“சிங்கப்பூர் வந்திறங்கும் இந்திய பயணிகளுக்கு மேலும் ஒரு தளர்வு” : இனி நீங்க தாராளமா பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் – முழு விவரம்

நமது சிங்கப்பூர் அரசு பல கட்டங்களில் தனது எல்லைகளை தொடர்ச்சியாக தளர்வுபடுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வியட்நாம் மற்றும் கிரீஸ் நாட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 4) புதிய தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைகளை (VTLs) அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தற்போது மலேசியா, இந்தோனேசியா மற்றும் அண்டை நாடான இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத VTL பயணத்தை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் வரும் மார்ச் 16 முதல், மலேசியாவுக்கான சிங்கப்பூரின் VTL சேவை கோலாலம்பூரை கடந்து பினாங்கு வரை நீடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் காலை உணவுக்கு ஆர்டர் செய்த சாப்பாட்டில் இறந்துகிடந்த “பல்லி” – இழப்பீடாக 2 வாரத்துக்கு இலவச உணவு!

அதே போல மார்ச் 16 முதல், இந்தோனேசியாவுக்கான VTL சேவை Bali மற்றும் Denpasar ஆகிய நகரங்களை உள்ளடக்கி Jakarta நகரத்திற்கு அப்பால் நீட்டிக்கப்படும். Bali மற்றும் Denpasarல் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்படும். தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை மார்ச் நடுப்பகுதியில் இருந்து பாலிக்குள் நுழைய அனுமதிக்கும் சோதனையை இந்தோனேஷியா தொடங்க திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான இந்தியாவிற்கான VTL சேவையும் சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று CAAS தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு கூடுதல் தளர்வாக குறிப்பிட்ட பயணிகள் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கும்போது அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்ல பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கையில் மார்ச் 31 வரை Oral-B எலக்ட்ரிக் டூத் பிரஷ் இலவசம்

இதுவரை, சாங்கி விமான நிலையம் வரும் பயணிகள் தனியார் வாகனங்கள் மூலம் மட்டுமே தங்கள் இல்லங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு மற்றும் அண்மையில் தொற்றிலிருந்து குணமடைந்தவராக (7 – 90 நாட்கள்) இருந்தால் அவர்கள் பொது மற்றும் தனியார் போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts