TamilSaaga

சிங்கப்பூர் Jurong East பகுதி.. “நூலிழையில் தப்பிய மூவர்” : பொறுப்பற்று செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் – Video உள்ளே

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று மாலை ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 வழியாக சாலையைக் கடக்கும் மூன்று பாதசாரிகளைக் நூலிழையில் கடந்து செல்லும் ஒரு பேருந்து குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தும் அந்த பேருந்து அதிவேகமாக கடந்து செல்லும் அந்த காட்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பேருந்து ஓட்டுநரின் செயலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தின் Dashcam காட்சிகளை Beh Chia Lor என்ற முகநூல் குழு பகிர்ந்துள்ளது. (Video Curtsey – Beh Chia Lor Facebook Page)

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் B.Sc Hotel Management முடித்தவர்களுக்கு E Pass-ல் வேலை” – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

இந்த நிகழ்வு குறித்து மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த SBS டிரான்சிட், “சம்பவத்தை விசாரித்துவிட்டதாகவும், இந்த பஸ் கேப்டனின் ஆபத்தான செயல்களை நாங்கள் மன்னிக்கவில்லை” என்றும் கூறியது. SBS ட்ரான்சிட்டின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மூத்த துணைத் தலைவர் Tammy Tan, “யாருக்கும் காயம்ஏற்படாமல் இருந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் அந்த பாதசாரிகளிடம் “ஏற்பட்ட துயரத்திற்காக” மன்னிப்புக் கோருவதாகக் கூறினார்.

இதையும் படியுங்கள் : உலகமே வியந்து பார்க்கும் Elon Musk : ஆனால் அவரே மகிழ்ந்து போற்றிய Tesla-வின் “அசோக் எள்ளுச்சாமி” – யார் அந்த தமிழர்?

“இந்தத் தவறை நாங்கள் மிகவும் தீவிரமாகப் பார்க்கிறோம், மேலும் பேருந்து கேப்டனுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம்” என்று டான் மேலும் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts