சிங்கப்பூரி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஒரு பழமையான இந்து கோயில் தான் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயம்.
ஆலய வரலாறு
1800 களின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் வசித்து வந்த செல்வாக்கு மிக்க சமூகத் தலைவர்களான அருணாச்சல பிள்ளை, ராமசாமி பிள்ளை, அப்பசாமி பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை மற்றும் ராமசாமி ஜமிதர் ஆகியோர் இணைந்து வைணவ வழிபாட்டிற்காக ஒரு கோயிலை கட்ட விரும்பினார்கள். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார்கள்.
1851 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து சுமார் 2 ஏக்கருக்கு சற்று அதிகமான அளவிலான நிலத்தினை வாங்கினார்கள். அன்றைய நாளில் அதனுடைய விலை 8 ஆண்டுகள் பயன்பாட்டுக்கு 26 ரூபாய் ( அந்த காலகட்டத்தில் இந்திய நாணயம் பயன்படுத்தப்பட்டது).
பிறகு 1894 ஆம் ஆண்டில் கோயிலுக்கு தேவையான நிலத்தை சிதம்பரம் பிள்ளை மற்றும் முருகேசு ஆகியோர் நன்கொடையாக வழங்கினார்கள்.
அவர்கள் வழங்கிய நிலத்தின் மதிப்பீடு சுமார் 26,792 சதுரடி.
1950 ஆம் ஆண்டுவரை இந்த கோயிலில் எந்த மாற்றமும் இல்லை அதன் பிறகு 1952 க்கு பிறகு கோயில் மீண்டும் கட்டப்பட்டது.
தற்போதைய கட்டிடம், பிள்ளையாருக்கான கருவறை, இராஜ கோபுரம் மற்றும் நடைபாதை ஆகியவை புனரமைக்கப்பட்டது.
நரசிம்மரை ஸ்ரீனிவாசராக மாற்றியமைப்பு
முதலில் பிரதான தெய்வமாக நரசிம்மரை தான் வைத்து வழிபட்டு வந்தார்கள். பிறகு மேற்கண்ட கட்டமைப்புகளை கட்டிய பிறகு பல பெரியவர்களும் கோயிலின் பிரதான தெய்வத்தை கிருபையான அருளை வழங்கும் ஸ்ரீ சீனிவாசராக மாற்ற அறிவுரை கூறியதால் திருப்பதி பெருமாள் போன்ற சிலை வடிவமைக்கப்பட்டு பிரதான தெய்வமாய் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இங்கு பிரம்மோஸ்தவம் மற்றும் புரட்டாசி பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.