TamilSaaga

“ஆவணங்களை” வீட்டிலேயே வைத்துவிட்டு சென்ற சிங்கப்பூர் பெண்” : ஜோகூர் ஆற்றில் பிணமாக மிதந்த மர்மம் – என்ன நடந்தது?

சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்மணியின் சடலம் ஜோகூர் பாருவில் உள்ள சுங்கை பிளென்டாங்கில் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 2) அன்று கண்டெடுக்கப்பட்டது. காலை 10.45 மணியளவில் 64 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் ஒருவரால் உடனடியாக போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

“இனி எந்த கவலையும் வேண்டாம்” : Changi Airportன் மூன்று புதிய முன்னெடுப்புகள்” : பயனடையப்போவது யார் தெரியுமா?

பெர்னாமா செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, “காணாமல் போனவர்கள் பற்றிய புகாரை பதிவு செய்த இறந்த அந்த பெண்ணின் உறவினர் என்று நம்பப்படும் 33 வயதுடைய நபரைக் கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது. அந்த பெண் சிங்கப்பூர் நாட்டவர் என்றும், மலேசிய ஆடவரை மணந்தார் என்றும், அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோகூர் பாருவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி காலை அவர் தனது மொபைல் போன், பணப்பை, பாஸ்போர்ட் மற்றும் சிங்கப்பூர் IC போன்ற முக்கியமான ஆவணங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் முகமட் சோஹைமி தெரிவித்தார். “போலீசார் இன்னும் வழக்கை விசாரித்து வருகின்றனர், இந்த கட்டத்தில், இது திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று முகமட் சோஹைமி கூறினார்.

“இது மிகவும் தைரியமான நடவடிக்கை” : இந்திய பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த சிங்கப்பூர் வணிக தலைவர்கள்

மேலும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மரணம் இயற்கையானதா? அவரை காணவில்லை என்று புகார் அளித்த நபர் எங்கே என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts