TamilSaaga

“General Motors” தொழிற்சாலை 1086 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது – சீன நிறுவனத்துக்கு விற்க முடிவு

இந்தியாவில் புனேவில் உள்ள Talegaon பகுதியில் இயங்கி வருகிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் உற்பத்தி தொழிற்சாலை. இதில் பணியாற்றிய சுமார் 1086 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை தனது உற்பத்தியை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிறுத்தியது. தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல சலுகைகளுடன் ஓய்வு பெற அறிவுறித்தியதும் இதனால் அந்த தொழிற்சாலையின் சுமார் 75 சதவீதம் பணியாளர்கள் அதனை ஏற்று கடந்த ஜீலை.4 ல் ஓய்வு பெற்றனர்.

ஆனால் இதனை எதிர்த்து 1086 பணியாளர்கள் ஓய்வை ஏற்க மறுத்ததால் கடந்த ஜீலை.12ஆம் தேதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தொழிலாளர் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. இதனால் தொழிற்சாலைக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

ஜீலை.15 ஊழியர்கள் அமைப்பு வழக்கினை தொடுத்தது. ஏற்கனவே ஜெனரல் மோட்டார்ஸ் தனது தொழிற்சாலையை சீன கார் நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் கம்பெனிக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. தற்போது இந்த வழக்கின் மூலம் அதனை தடுத்து நிறுத்த ஊழியர்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

தனது

உற்பத்தியை மொத்தமாக நிறுத்தி சீன கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தனது தொழிற்சாலையை விற்க ஜெனரல் மோட்டார்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் ஒப்புதல்?
இந்தியா மற்றும் சீனா இடையே நடக்கும் எல்லை பிரச்சனை காரணமாகவும் இதனால் பல வீரர்கள் இறந்த சூழலில், சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் இந்த தொழிற்சாலையை கைப்பற்றவும் இந்திய அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

நீதிமன்ற வழிகாட்டுதல்:
கடந்த ஜீலை.16 தொழிற்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்த போது சீன நிறுவனத்துக்கு விற்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் இல்லையெனில் Stay Order வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதனால் 2010 ஆகஸ்ட் 3 வரை எந்தவித வர்த்தக செயல்பாடுகளும் செய்யமால் ஜெனரல் மோட்டர்ஸ் காத்திருக்கிறது.

Related posts