பல நாடுகளில் சில பொருட்கள் பல ஆண்டுகளாக ஒரே விற்பனை செய்து வரப்படுவதை நாம் அறிந்திருப்போம். எடுத்துக்காட்டாக அண்டை நாடான இந்தியாவில் Boomer என்ற bubble gum பல ஆண்டுகளாக ஒரு இந்திய ரூபாய் என்ற விலைக்கே விற்று வருகின்றது. இந்நிலையில் இதேபோல பல ஆண்டுகளாக 10 yen என்ற விலையில் விற்றுவந்த ஜப்பானின் மொறுமொறுப்பான Umaibo Corn Puff தயாரிப்பு நிறுவனம் தற்போது அந்த தின்பண்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது பெரும் சோகத்தை அதை விரும்பி சாப்பிடும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதுல எத்தனை யானைகள் இருக்கு? துல்லியமா கண்டுபிடித்து பதில் சொல்ல முடியுமா? 99% பதில் தவறு தான்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாகக் கொண்ட Yaokin Corp, நிறுவனத்திற்கு ஏற்படும் அதிக செலவுகள் காரணமாக Umaiboவின் விலையை 2 யென் ($.02) உயர்த்தி இனி 12 யென்க்கு விற்பனை செய்யவுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகின்றது. கடந்த 1979ல் விற்பனைக்கு வந்த இந்த பல ஆண்டுகள் கழித்து தற்போது விலையேற்றம் பெற்றுள்ளது. ஜப்பான், பல தசாப்தங்களாக, உயர்ந்து வரும் பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவுகளில் இருந்து விடுபடவில்லை என்பதும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை.
மேற்கத்திய நாடுகளில் விலைகள் ஏறுமுகமாக இருந்தாலும், செலவு உணர்திறன் கொண்ட வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக, ஜப்பானிய நிறுவனங்கள் இதுவரை விலைகளை அதிகரிக்கத் தயங்குகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக ஒரே விலையில் விற்று வந்த Umaibo தற்போது வெளியேற்றம் பெற்றுள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சீஸ் பஃப்ஸைப் போலவே சுவைகொண்ட, ஆனால் சிலிண்டர் போன்ற வடிவத்தில் வரும் Umaibo 15 விதமான சுவைகளில் விற்கப்படுகிறது. Umaiboவின் கிரீமி கார்ன் சூப் தான் ஜப்பானில் அதிகம் விற்பனையாகும் ஒரு flavor என்றும் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 700 மில்லியன் அளவிற்கு இந்த மொறுமொறுப்பான குச்சிகள் பொதிகளாகவும், தனித்தனியாகவும் விற்கப்படுகின்றன. “மலிவான தின்பண்டங்கள், குழந்தைகள் வாங்கக்கூடிய பொருட்களில் கூட விலை உயர்வின் தாக்கம் உணரப்படுவது சற்று வருத்தமளிக்கிறது என்று பல ஜப்பானிய இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.
ஜப்பானை பொறுத்தவரை உணவு உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் விலைகளை நேரடியாக உயர்த்துவதற்குப் பதிலாக பாக்கெட்களில் அளவை குறைப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகிறார்கள். இதே செயலை கடந்த 2007ம் ஆண்டு umaiboவில் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. உற்பத்தியாளரின் பார்வையில், அவர்கள் விலையை உயர்த்தாத வரை இனி லாபகரமாக நிறுவனங்கள் செயல்பட முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.