Jake Ross என்ற 47 வயதான அமெரிக்க ஆடவருக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகளின் வீடியோக்களை மற்றொரு செயலி மூலம் நேரடியாக ஒளிபரப்பியதற்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தி சார்லோட் அப்சர்வர் என்று செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய நீதிமன்ற ஆவணங்களின்படி, ராஸ் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். தொடர்புகொண்டு அவர் தனது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய தூண்டி அதற்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வடக்கு கரோலினாவில் வசித்து வந்த நிலையில் அந்த கொடூர காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியுள்ளார்.
28 வீடியோக்கள் இந்த வழக்கில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, ரோஸ் கடந்த ஜூலை 2020ல் கைது செய்யப்பட்டார், மேலும் மார்ச் 2021ல் சிறார் சம்மந்தப்பட்ட ஆபாசக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றார். மேலும் 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது, சிறார்பாலியல் குற்றங்களில் வட கரோலினாவின் மேற்கு மாவட்டத்தில் வழங்கப்பட்ட மிக நீண்ட தண்டனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டில், UNICEF,பிலிப்பைன்ஸை குழந்தைகள் சம்பந்தப்பட்ட நேரடி ஸ்ட்ரீம் பாலியல் துஷ்பிரயோக வர்த்தகத்தின் “உலகளாவிய மையம்” என்று பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 2021ல், குழந்தைகள் நலனுக்கான பிலிப்பைன்ஸ் ஹவுஸ் கமிட்டி, குழந்தைகளை ஆன்லைன் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கையை குறித்து விசாரிக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.