சிங்கிள் நேம் எனப்படும் ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் இனிமேல் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது… என்ன காரணம்.. விதிமுறை என்ன சொல்கிறது?
பொதுவாக பாஸ்போர்ட்டுகளில் முதல் பெயர் மற்றும் இரண்டாம் பெயர்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம். உலகின் பெரும்பாலான நாடுகளின் பாஸ்போர்ட்களில் இதுதான் நடைமுறை. இந்த நடைமுறையைத் தீவிரமாகக் கடைபிடிக்க ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதற்காக அவர்கள் அறிவித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலும் கடுமையானதாக இருக்கிறது.
இதையும் படிங்க: பெற்ற தாயை விட ஒருபடி மேல் யோசித்த துபாய் அரசு – ஒரு பட்டன் அழுத்தினால் போதும்.. துபாய் முழுவதும் “இலவச உணவு” தரும் வெண்டிங் மெஷின்!
ஐக்கிய அரபு அமீரக அரசின் வணிகரீதியிலான ஒப்பந்தம் போட்டிருக்கும் இண்டிகோ விமான நிறுவனத்திடம் அந்த நாட்டின் அரசு அதிகாரிகள் தரப்பில் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.
அது என்னவென்றால், ஒற்றைப் பெயர் எனப்படும் சிங்கிள் நேம் மட்டுமே கொண்டவர்கள் இனிமேல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுலா அல்லது மற்ற எந்தவிதமான விசாக்களையும் பெற்று வந்து செல்ல முடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். இதனால், ஒற்றைப் பெயர் கொண்டவர்கள் எந்த விசாவின் கீழும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று வர முடியாது என்று தெரிய வருகிறது.
இதையும் படிங்க: மாதம் 9 லட்சம் சம்பளமும் வேண்டாம்.. குடியுரிமையும் வேண்டாம்…
ஐக்கிய அரபு அமீரக அரசின் புதிய வழிகாட்டுதல்படி, நவம்பர் 21-ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, பாஸ்போர்ட்டில் முதல் மற்றும் இரண்டாவது பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் புதிய விசா கோரி விண்ணப்பித்திருந்தால், அதை முழுமையாக நிராகரிக்க முடியும் என்கிறார்கள்.
அதேநேரம், நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க உரிமம் பெற்றிருந்தால், ஒற்றைப் பெயரையே குடும்பப் பெயர் இடம்பெற வேண்டிய இடத்தில் குறிப்பிடலாம். அப்படி குறிப்பிட்டு பதிவேற்றி புதுப்பித்திருந்தாலே போதும், ஐக்கிய அரபு அமீரக விசாவை எளிதாகப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது..!