TamilSaaga

“சிங்கப்பூரர்களை வரவேற்க தயாராகும் அடுத்த நாடு?” : முதலில் “இவர்களுக்கு” தான் அனுமதி – முழு விவரம்

ஆஸ்திரேலியா, சிங்கப்பூருடனான பயணப்பாதை குறித்த பேச்சுவார்த்தையின் “இறுதி கட்டத்தில்” இருப்பதாகவும், “அடுத்த வாரம் அல்லது அதற்கு முன்னதாக” திட்டங்கள் நிறுவப்பட்டு இரு நாடுகளுக்கு இடையே ஒரு புதிய பயண ஏற்பாட்டை அமைக்க ஆவணம் செய்து வருவதாக, பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பதற்கு முன், தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மற்றும் வணிகப் பயணிகளை முதலில் இருநாடுகளுக்கிடையே பயணிக்க அனுமதிக்க இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயணம் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பெருந்தொற்று கட்டுப்பாடுகளை பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்கள் ஏற்கனவே நவம்பர் 1 முதல் தடுப்பூசி போடப்பட்ட சர்வதேச பயணிகளுக்கான கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தலை கைவிட இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த திட்டத்தின் “முதல் படியே ஆஸ்திரேலியர்களை நாட்டிற்குள் அழைத்து வருவது தான்” என்று திரு மோரிசன் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும் மாணவர் விசா, வணிகப் பயணிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களை தொடர்ச்சியாக வரவேற்க உள்ளதாகவும் அவர் கூறினார். திரு மோரிசன் மேலும் கூறுகையில், இந்த “ஆண்டின் இறுதிக்குள்” சர்வதேச பார்வையாளர்களை ஆஸ்திரேலியா வரவேற்கலாம், ஆனால் நாடு மீண்டும் தனது எல்லைகளை முழுமையாக திறப்பதற்கு நிச்சயம் அவசரப்படாது, “பாதுகாப்பாக திறக்கப்படும், என்று கூறினார்.

திரு மோரிசன் அவர்களின் இந்த தகவலுக்கு பதிலளிக்கும் விதத்தில் தனது முகநூலில் பதிவிட்ட நமது பிரதமர் லீ, இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்றும். “சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா வலுவான பொருளாதார மற்றும் முதலீட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளன எண்டுறம், மேலும் இரு நாட்டு மக்களிடையே அன்பான உறவுகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். ​எங்கள் இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய இணைப்பை மீண்டும் தொடங்க எதிர்நோக்குவோம் என்றும் அவர் கூறினார்.

Related posts