TamilSaaga

“இனி அப்படி செய்யமாட்டேன், என்னை மன்னியுங்கள்” : வருத்தப்பட்ட நெட்டிசன்கள் – Open Statement கொடுத்த பிரபலம்

கொரிய நாட்டில் அதிக மக்களால் அறியப்பட்ட ஆன்லைன் பிரபலம் தான் Song Ji-A. அண்மையில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான டேட்டிங் தொடரான ​​”Single’s Inferno” மூலம் அவர் இன்னும் அதிக அளவில் பிரபலமண்டைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொம்மை போன்ற தோற்றம் மற்றும் டிசைனர் ஃபேஷன் மீதான அவருடைய காதல் ஆகியவற்றால் அறியப்பட்ட 25 வயதான Song, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் அவரது இன்ஸ்டாகிராம் படங்களிலும் போலி டிசைனர் பொருட்களை அணிந்ததாக சமீபத்தில் நெட்டிசன்கள் அவர் மீது குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Jurong West பகுதியில் தீ” : 45 பேர் வெளியேற்றம், 5 பேர் மருத்துவமனையில் – எங்கு தீ பிடித்தது?

இந்நிலையில் கடந்த ஜனவரி 17 அன்று, Song அவர் மீது தனது ரசிகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது கையால் எழுதப்பட்ட மன்னிப்பு கடிதத்தையும் அவர் வெளியிட்டார். Allkpop என்ற அமெரிக்க இணையதளம் அளிக்கும் தகவலின்படி, அவர் தனது ரசிகர்கள், Subscriberகள் மற்றும் பிராண்ட் பிரதிநிதிகள் உட்பட “தனது செயலின் காரணமாக ஏமாற்றம் மற்றும் புண்படுத்தப்பட்ட அனைவரிடமும்” மன்னிப்பு கேட்டு தனது கடிதத்தை துவங்கியுள்ளார் என்று கூறியுள்ளது Allkpop.

அவரது சமூக ஊடகங்கள் மற்றும் “Single’s Inferno” தொடர் ஆகியவற்றில் தோன்றிய அவரது போலி டிசைனர் பொருட்களைப் பற்றி நெட்டிசன்கள் கூறிய சில கருத்துக்கள் உண்மை என்று அவர் ஒப்புக்கொண்டார். வடிவமைப்பாளர்களின் படைப்புகளின் மீறல் மற்றும் பதிப்புரிமை பற்றிய அறியாமைக்கும் அவர் மன்னிப்பு கேட்டார். தனது சொந்த பிராண்டைத் தொடங்க வேண்டும் என்ற கனவைக் கொண்ட ஒருவர், தனது இந்த செயல்களை கண்டு மிகவும் வருந்தியதால் தனது தவறை Song ஒப்புக்கொள்வதாக கூறினார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கவனமாக இருப்பேன் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் : தென் கிழக்கு ஆசியாவை குறிவைக்கும் சிங்கப்பூரின் “வர்த்தகப் புலி” – பெரும் சக்தி வாய்ந்த வங்கியாக உருவெடுக்கும் UOB

அதுமட்டுமல்லாமல் போலி பொருட்களை உள்ளடக்கிய அனைத்து பதிவுகளையும் அவர் நீக்கிவிட்டதாகவும், தனது செயலால் பாதிக்கப்பட்ட பிராண்டுகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். வெளியோட்டமாக நாம் பார்க்கும்பொது இது சாதாரண விஷயமாக தெரிந்தாலும் Branded பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அதிக அளவில் செலவு செய்வது விளம்பரத்தில் தான். ஆகையால் இது போன்ற நிகழ்வு அவர்களுடைய நிலைத்தன்மையை அதிக அளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts