TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஆசைப்படும் இளைஞரா நீங்க… பைசா செலவில்லாமல் நல்ல வேலையை தட்டி தூக்க முடியும்… சம்பளம் கூட $2000 சிங்கப்பூர் டாலராம்?

சிங்கப்பூருக்கு வெளிநாட்டில் இருந்து வேலை தேடுவதற்கு பல வழிகளும் அதற்குரிய பாஸ்களும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இந்த பாஸ்களுக்கு எல்லாம் செலவுகள் என்னவோ லட்சத்தில் தான் இருக்கிறது. இந்த பாஸ்களை வாங்கி லட்சத்தில் கடனை வாங்கி சிங்கப்பூர் வந்து இரண்டு வருடம் போராடி அடைப்பவர்களும் உண்டு. இந்த வாழ்க்கை செட்டாகாமல் சொந்த நாட்டிற்கு திரும்பி இன்னும் சிக்கலில் சிக்கியவர்களும் உண்டு.

ரொம்ப ரொம்ப குறைந்த செலவில் நீங்க சிங்கப்பூர் வேலைக்கு வர ஒரு அருமையான வழி இருக்கிறது. அது தான் வேலைக்கான தளங்கள். இதில் பல பிரபலமான தளங்கள் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. அதில் வேலைக்காக பலரும் பதிந்து வருகிறார்கள். இந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்திருப்பது தான் Jobstreet. இந்த வெப்சைட்டில் ஒரு வேலைக்கு எப்படி அப்ளே செய்யலாம் என்பதை தான் இப்போ பார்க்க போறோம்.

எல்லா வேலை வாய்ப்பு தளங்களை போல தான் Jobstreetம் இயங்கி வருகிறது. https://www.jobstreet.com என்ற இணையத்தளத்தினுள் செல்லுங்கள். அதில் பல நாடுகளுடன் சிங்கப்பூரும் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு முகப்பு பக்கம் வரும்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வரணும்-னா Bond Paper எவ்வளவு முக்கியம்? இது தெரியாம டிக்கெட் போட்டால் மொத்த பணமும் வீண்… இத படிங்க அப்புறம் போடலாம் டிக்கெட்டு!

அதில் Login பட்டனை அழுத்தி உங்களின் மெயில் ஐடியை போட்டு ஒரு கணக்கினை துவக்குங்கள். அதில் உங்களின் பெர்சனல் தகவல் முதல் கல்வி தகுதி என அனைத்தினையும் பதிவிடுங்கள். மேலும் உங்களுக்கு முன் அனுபவம் இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்.

பின்னர் மீண்டும் முகப்பு பக்கத்திற்கு வரவும். job search என்ற ஐகானை அழுத்த வேண்டும். இப்போது உங்களுக்கு மூன்று பாக்ஸ் காட்டப்படும். அதில் வேலைக்காக keyword, எந்த ஏரியா, வேலை சம்மந்தப்பட்ட துறை அனைத்தினை பயன்படுத்தலாம். இதில் அதிகப்பட்சமாக keyword மற்றும் துறை சார்ந்த பாக்ஸ் மட்டுமே அதிகம் பயன்படும். உங்களுக்கு என்ன வேலை தேவைபடுகிறதோ அது சம்மந்தப்பட்ட வார்த்தைகளை எடுத்துக்காட்டாக நீங்கள் டிரைவர் வேலைக்கு செல்ல ஆசைப்பட்டால் keyword பாக்ஸில் driver எனக் குறிப்பிடுங்கள். உங்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு தகவல்கள் காட்டப்படும். அதில் உங்களுக்கு பொருத்தமான வேலைகளுக்கு நீங்கள் அப்ளே செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 வேலைக்கு அப்ளே செய்வது நல்லது.

அதுப்போல பதில்கள் வருபவதற்கு 10 நாட்களுக்கு மேலே நேரம் எடுக்கும். இதில் சிங்கப்பூர் மக்களுக்கு எளிதாக வேலை கிடைத்து விடும். வெளிநாட்டில் இருந்து வேலை தேடுபவர்களுக்கு அத்தனை எளிதில் கிடைத்து விடாது. இருந்தும் விடாமல் முயற்சி செய்து இதன் மூலம் சிங்கப்பூர் வேலைக்கு வந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts