TamilSaaga

“சிங்கப்பூரில் தனிநபர் கடன் மோசடி” – குருமூர்த்தி என்பவர் உட்பட 3 முன்னாள் வங்கி ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் இன்று வியாழன் (டிசம்பர் 9) மூன்று முன்னாள் வங்கி ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர், சிட்டி வங்கியை ஏமாற்றி சுமார் 2,06,000 சிங்கப்பூர் டாலர்களுக்கு மேல் மோசடியான தனிநபர் கடன்களை வழங்க சதி செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அந்த மூன்று முன்னாள் வங்கி ஊழியர்கள் : கிர்க் சுவா மின் சுவான் (28 வயது), அவர் ஏமாற்ற சதி செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது, இதேபோன்ற மூன்று குற்றச்சாட்டுகளைப் பெற்ற குருமூர்த்தி சந்திரன் (வயது 26); மற்றும் ஜிம் பிரையன் சிம் ஜுன் ஹாங் (வயது 26).

இதையும் படியுங்கள் : “வெறும் 15 நிமிடத்தில் Result கிடைக்கும்”

இன்று வியாழனன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் கடன் விண்ணப்பதாரர்களான நவென்குமார் ராமகிருஷ்ணன் (வயது 28), நோவா லூ யூ ஹாங் (வயது 27), மற்றும் ஃபூ ஜின் டாய் (வயது 27) ஆகியோர் அடங்குவர். மீதமுள்ள மூன்று ஆண்கள் : யாப் சியாங் யூஜின், 27, சுவா ஹாங் வெய், 28, மற்றும் என்ஜி ஜியா ஹாவ், 25 ஆகியோர் ஆவர்.

வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகையின் படி, அந்த நபர்கள் கடந்த செப்டம்பர் 2018-ல் சிட்டி வங்கியை ஏமாற்ற சதி செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தவறான வருமானம் அல்லது மத்திய வருங்கால வைப்பு நிதி ஆவணங்களை வங்கியில் கடனுக்காக சமர்ப்பிக்க உதவினார்கள். 6,200 வெள்ளி முதல் 10,200 வெள்ளி வரையிலான விண்ணப்பதாரரின் மாத அடிப்படைச் சம்பளத்தைப் பிரதிபலிக்கும் தவறான ஆவணங்களின் அடிப்படையில், 14 பேருக்கு 11,780 வெள்ளி முதல் 24,795 வெள்ளி வரையிலான தொகைகளை வழங்குவதில் வங்கி ஏமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கி சார்ந்த குற்றங்கள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தன என்பதை தற்போதுள்ள ஆரம்ப கட்ட குற்றவியல் ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும் இந்த ஒன்பது பேரும் ஜனவரியில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். மோசடி செய்ய சதி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு குற்றச்சாட்டிற்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts