வாழ்க்கை நம்மை எந்தளவுக்கு சோதிக்கும் என்பதற்கு இச்செய்தி ஒரு உதாரணம்.
மலேசியாவின் Gemencheh Negeri Sembilan பகுதியில் வசித்து வரும் தம்பதி கணேஷ் – புனிதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு கைக் குழந்தை உள்ளது. கணேஷ் மலேசியாவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விபத்தில் சிக்கிய கணேஷ், கிட்டத்தட்ட 41 நாட்களாக கோமாவில் இருக்கிறார்.
மலேசியாவின் Kuala Pilah மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது வரை அவர் கண் விழிக்கவில்லை என்றே தெரிகிறது.
தனது இந்த வேதனையான நிலை குறித்து புனிதா தனது முகநூல் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கணவர் கோமாவில் இருப்பதால், தனது குழந்தையுடன் தான் படும் துயரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் குழந்தையுடன் தவித்து வருவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.