சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும் கார் ஒன்று சில நிமிடத்திற்குள்ளாக வானில் பறக்கும் விமானமாக மாறும் வகையில் ஓரு அற்புத கார் கண்டுபிக்கப்பட்டுள்ளது.
நைட்ரா-ஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு நிறுவனம் இந்த காரை கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன்பும் சில பறக்கும் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் இது இன்னும் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளது.
பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய பி.எம்.டபிள்யூ எஞ்சின் பொறுத்தப்பட்ட இந்த கார் தரையில் 2 நிமிடம் 15 வினாடிகள் ஓடி பிறகு உடனடியாக விமானமாகி வானில் பறக்கக்கூடியது. இதற்கான சோதனை ஓட்டமானது இன்று நைட்ரா-ஸ்லோவாக்கியாவில் உள்ள பிரிட்டிஸ்லாவா சர்வதேச விமான நிலையங்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில் சுமார் 35 நிமிடம் ஓட்டி சோதனை செய்யப்பட்டது.
இந்த கார் சுமார் 8,200 அடி உயரம் வரையிலும், சுமார் 1000 கி.மீ தூரமும் பறக்கும் என்று இந்த காரை வடிவமைத்த பேராசிரியர் திரு.ஸ்டீபன் க்ளீன் தெரிவித்துள்ளார்.