TamilSaaga

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வருகை சிங்கப்பூரை பாதிக்குமா? – ISD என்ன சொல்கிறது? முழு விவரம்

தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் தலிபான் நிலைமை இப்பகுதியில் இருந்து போராளிகளை நாட்டிற்குள் ஈர்த்து அதன் மூலம் சிங்கப்பூர் மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபானின் முன்னேற்றங்கள் காணப்படுகிறது.

இதனால் தென்கிழக்கு ஆசியாவில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை அதிகரிக்கலாம் என்றும், தீவிரவாத குழுக்களால் ஆள்சேர்ப்பை ஊக்குவிப்பது மற்றும் தாக்குதல்களைத் தூண்டுவது உட்பட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை (ISD) மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, தீவிரவாத இஸ்லாமியப் போராளிகள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்ததால் ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும் சண்டை நடக்காமல் தவிர்க்க விரும்புவதாகக் கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டை விட்டு வெளியேறினார். சிவில் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், அமெரிக்கா தலைமையிலான படைகள் அங்கிருந்து வெளியேறின மேலும் இந்தியா உள்பட மேற்கத்திய நாடுகள் தங்கள் குடிமக்களை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.

தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் சூழ்நிலையிலிருந்து, சிங்கப்பூருக்கு தற்போது குறிப்பிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று ஐஎஸ்டி செய்தித் தொடர்பாளர் கூறினார், ஆனால் இன்னும் கவலை அளிக்கும் நிலையே நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts