TamilSaaga

ஒளிந்திருக்கும் ஏலியன்களை வெளியே கொண்டு வர புதிய முயற்சி.. மனிதர்களின் “நிர்வாண” புகைப்படங்களை அனுப்ப முடிவு – NASA தடாலடி அறிவிப்பு

சரியாக எப்போது தோன்றியது தரவுகள் இல்லை என்றபோது, பல நூறு ஆண்டுகளாகவே மனித இனம் தன்னை போன்ற அல்லது வேறு ஏதேனும் ஜீவராசிகள் பிற கிரகங்களில் உள்ளதா என்ற ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் Area 51 என்ற ஒரு பிரத்தியேக இடத்தை உருவாக்கி அங்கு வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஏலியன்கள் என்று அழைக்கப்படும் அந்த வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்ள புதிய வழி ஒன்றை சோதிக்கவுள்ளது NASA.

மனிதர்களின் நிர்வாண புகைப்படங்கள்

என்னது மனிதர்களின் நிர்வாண புகைப்படங்களா? என்று ஆச்சர்யப்படாத மனிதர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் NASA அப்படி ஒரு வழியைத்தான் கையாளவுள்ளது, இந்த யோசனை வினோதமாகத் தோன்றலாம். ஆனால் அப்டேட் செய்யப்பட்ட பைனரி-குறியீடு செய்தியாக அந்த புகைப்படங்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதி அது.

Galaxyயில் உள்ள பூமிக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்க கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வானியற்பியல் விஞ்ஞானி டாக்டர் ஜோனதன் ஜியாங் மற்றும் அவரது சக ஊழியர்களால் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட்டின் உள்ளே சினிமா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல்ஸ் – “பிரம்மாண்ட பாகுபலி”யாக உருமாறி வரும் சென்னை விமான நிலையம்

நிர்வாண ஆண் மற்றும் பெண்ணின் உருவத்தை பைனரி கோடுகளாகவும், மற்றும் பூமியில் வாழும் மனிதர்களின் DNA கட்டமைப்புகளின் படங்கள் அனுப்படவுள்ளன. மேலும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள பிற உயிர்களின் அமைப்பு குறித்து வேற்றுகிரகவாசிகளுக்கு தகவல்கள் அனுப்படவுள்ளன.

வேற்றுகிரகவாசிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது என்பதால் Milky Way எனப்படும் அந்த பால்வெளி அண்டத்தில் தங்களுக்கு அதிக தகவல்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் குறிக்கும் இடத்தை நோக்கி இந்த தரவுகள் ஒளிபரப்பப்படும்.

இதுவரை இதுபோல பல தரவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்றபோது, விஞ்ஞானிகள் எதிர்பார்த்த பதிகள் அவர்களுக்கு வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து கிடைத்ததா என்றால் அது NASA போன்ற ஆராச்சி நிறுவனங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts