TamilSaaga

‘தொடர்ந்து பரவும் தொற்று’ – இந்தோனேசியர்கள் சிங்கப்பூர் வர புதிய கட்டுப்பாடு

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வாசிகள் அல்லாது சிங்கப்பூருக்கு வரும் இந்தோனேசியர்களுக்கு கடுமையான எல்லை கட்டுப்பாட்டு விதிகளை தற்போது விதித்துள்ளது சிங்கப்பூர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தோனேசியாவில் கிருமி பரவல் நிலவரம் மோசமடைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 21 நாட்களுக்குள் இந்தோனேஷியா சென்று வந்தவர்கள் சிங்கப்பூர் வழியாக பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் இந்த முறையானது வரும் திங்கட்கிழமை (ஜூலை 12) முதல் நடைமுறைக்கு என்று கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் வர விரும்பும் பயணிகள் கட்டாய கிருமி பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

சிங்கப்பூருக்கு பயணிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு இந்த பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நிரந்தர வாசிகள் அல்லது நீண்டகால வேலை அனுமதி வைத்திருப்போர் புதிய நடைமுறைக்கு இணங்க தவறினால் அத்தகையோரின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts