TamilSaaga

சிங்கப்பூரில் அடுத்தடுத்து தூக்குத்தண்டை விதிக்கப்படும் தமிழர்கள்.. என்ன நடக்கிறது? ஏன் சிங்கப்பூர் அரசு இவ்வளவு கடுமை காட்டுகிறது? ஒரு Complete Report

எத்தனை ஆயிரம் மனுக்கள், கோடிக்கணக்கான மக்களின் வேண்டுகோள், சிங்கப்பூர் ஜனாதிபதிக்கே நேரடியாக அனுப்பப்பட்ட கருணை மனுக்கள். ஆனால் இது எதுமே பலனளிக்கவில்லை நாகேந்திரன் விஷயத்தில் என்று தான் கூறவேண்டும்.

நாகேந்திரன் கே. தர்மலிங்கம், இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். 2009ம் ஆண்டு சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில் 2010ம் ஆண்டே அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சரி இதுஒருபுரம் இருக்க கடந்த 2015ம் ஆண்டு சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி நேற்று ஏப்ரல் 29ம் சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவிருந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியார் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.

சரி சிங்கப்பூரில் அடுத்தடுத்து தமிழர்கள் தண்டிக்கப்படுவது ஏன்? என்ன நடக்கிறது சிங்கப்பூரில்? சிங்கை அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இதுவரை சிங்கையில் தூக்கிலிடப்பட்ட வெளிநாட்டினர்

இதுவரை சிங்கையில் எத்தனை வெளிநாட்டினர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றபோது. 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டுக்குள் மட்டும் 90க்கும் அதிகமான வெளிநாட்டினர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் காதலியின் உடல்.. நடுரோட்டில் இழுத்து சென்ற இளைஞன் – அதிர்ந்துபோன போலீசார்!

2005ம் ஆண்டில் சண்முகம் என்ற முன்னாள் ராணுவ அதிகாரி மற்றும் நாகேந்திரன் ஆகிய இருவர் தான் போதை பொருள் கடந்தால் வழக்கில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல தட்சிணாமூர்த்தி மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரு இந்திய வம்சாவளி மலேசியர்கள் மரண தண்டனை பெற்று இறுதி தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி சிங்கையில் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு

மரண தண்டனை ஒரு மனிதநேயமற்ற செயல் என்று பலர் கூறியபோது, சிங்கப்பூரில் கடந்த 2015ம் ஆண்டு ஒரு ஆய்வு எடுக்கப்பட்டது, அதில் மரண தண்டனை என்ற ஒரு உச்சபட்ச தண்டனை இருக்க வேண்டும் என்று 95 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் அரசும் கொலை, கடத்தல், ராணுவ ரகசிய பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை விதித்து வருகின்றது.

இதுவரை சிங்கப்பூர் அரசு Malaysia, Hong Kong, Indonesia, Thailand, the Philippines, Bangladesh, India, Pakistan, Sri Lanka, Nigeria, Ghana, the Netherlands, United Kingdom மற்றும் Portugal ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களை தூக்கிலிட்டுள்ளது.

அதேபோல வெளிநாட்டவருக்கு மட்டுமல்ல சிங்கப்பூரர்கள் பலரும் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு ஒரு டாக்ஸி ஓட்டுநரை கொலைசெய்த குற்றத்திற்காக ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிட்டது சிங்கப்பூர் அரசு என்றால் உங்களால் நம்ப முடியுமா.

சிங்கப்பூர்.. தலையில் Steel Beam விழுந்து தொழிலாளர் பலி – சிங்கையில் ஒரே நாளில் இறந்த “2 வெளிநாட்டு ஊழியர்கள்” – ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7 பேர் பலி

தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்ற சித்தாந்தத்தை கையாளும் சிங்கப்பூர் அரசு. உலக அளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 7ம் இடத்தில் இருப்பதே அதற்கு சாட்சி.

மனித உரிமை மீறல் என்று பல குற்றச்சாட்டுகள் சிங்கப்பூர் மீது வைக்கப்பட்டாலும் இன்றளவும் தனது கொள்கையில் இருந்து சிங்கப்பூர் மாறியதில்லை. சிங்கப்பூரை போல பல நாடுகள் இன்றளவு, மரண தண்டனையை உச்சபட்ச தண்டனையாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts