TamilSaaga

“காம இச்சை நிறைவேறவில்லை” : இளம் பெண்ணை கத்தியால் குத்தி தப்பிய நபர் – பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

தாய்லாந்து நாட்டில் 31 வயதுடைய “நத்தச்சாய் அட்சமாத்” என்ற நபர் 23 வயது பெண்ணை கற்பழிக்க முயன்று அதன் பிறகு அந்த பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் Bangkok Post என்ற செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, Inthu-on Korharn என்ற பெயர் கொண்ட அந்த பெண், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பெருவிழா அன்று இரவு 11 மணியளவில் Muang Thong என்ற ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் இரு “இந்தியர்கள்” மீது குற்றச்சாட்டு – என்ன நடந்தது?

அந்த பெண் தொடையில் குத்தப்பட்டு, இறுதியில் அந்த கட்டிடத்தின் லிப்ட் அருகே இரத்தம் அதிகமாக கசிந்த நிலையில் இறந்துள்ளார். அந்த கத்திக்குத்து அந்த பெண்ணின் நாடியை அதிக அளவில் பாதித்துள்ளன முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளது. அண்ட் அடுக்குமாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த கொலையாளி, அந்த பாதிக்கப்பட்டவரை சம்பவத்தன்று தரை தளத்தில் பார்த்ததாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

பின்னர் அந்த பெண்ணுடைய அறைக்குள் நுழைந்து ஒரு அலமாரிக்கு இடையில் ஒளிந்துகொண்டு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டார் என்று Bangkok Post தெரிவித்துள்ளது. தன் மானத்தை காத்துக்கொள்ள அந்த கொலையாளியை இறந்த அந்த பெண் எதிர்த்து போராடியதாக போலீசார் தெரிவித்தனர். தனது காம இச்சை பின்னர் நிறைவேறாத நிலையில் அந்த கொலையாளி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன் அவரது தொடையில் ஒரு முறை குத்தியுள்ளான். தாய்லாந்தில் செயல்படும் Coconuts Bangkok என்ற மற்றொரு செய்தியின் கூற்றுப்படி, அதே மாடியில் வசிக்கும் ஒருவர் சம்பத்தன்று இரவு பிளாட்டுக்கு வெளியே ஒரு சலசலப்பைக் கேட்டார் என்று கூறப்படுகிறது. அவர் கதவை திறந்து பார்த்தபோது அந்த பெண் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தன்னை ஒருவன் குத்திவிட்டதாக அந்த பெண் கூற, அவர் உடனடியாக போலீசாருக்கு அழைத்துள்ளார். அப்போது அந்த கொலையாளி நதாச்சாய் ஏழாவது மாடியில் இருந்த படிக்கட்டுகளில் இருந்து கீழே விரைந்ததைக் கண்டார். பின்னர் போலீசார் அந்த கொலையாளியும் அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர். ரத்தம் படிந்த சட்டை மற்றும் கத்தி அவரது அறையில் இருந்து எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “எல்லாரையும் சுடப்போறேன்” : Tiong Bharu MRT-யில் முணுமுணுத்த நபர் – துரிதமாக செயல்பட்ட பெண்ணுக்கு விருது

போலீஸ் விசாரணையில் “தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், தனது மனைவி 15 நாட்களுக்கு முன் தான் ஒரு குழந்தைக்கு தாயானார் என்றும். தான் குடிபோதையிலும், மனைவியுடன் உடலுறவுகொள்ளமுடியாமல் பாலியல் விரக்தியில் இருந்ததாகவும், அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts