TamilSaaga

“நல்ல பரோட்டா மாஸ்டரை 24 நாட்களாக தேடுகிறோம்”.. ஆஸ்திரேலியாவில் உள்ள மலேசிய உணவகம் வெளியிட்ட பதிவு – சம்பளம் 3 லட்சமாம்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு மலேசிய உணவகம், சிங்கப்பூரில் Roti Parta என்று அழைக்கப்படும் பரோட்டாக்களை செய்யும் சமையல்காரரை வேலைக்கு அமர்த்துவதற்கு நல்ல சம்பளம் கொடுக்க தயாராக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள Roti Bar என்ற அந்த கடை மலேசிய உணவுகளை வழங்கும் ஒரு உணவகம். மெல்போர்ன் நகரில் தங்கள் தான் சிறந்த பரோட்டாக்களை வழங்கும் நிறுவனம் என்றும் அவர்கள் ஒரு பதிவில் கூறியுள்ளனர்.

இந்த நிறுவனம் வெளியிட்ட வேலை விளம்பரத்தில், அவர்கள் தங்கள் புதிய சமையல்காரருக்கு A$60,000 முதல் A$64,999 வரை (மாதம் சுமார் S$5,075 முதல் S$5,495 வரை) வழங்குவதாகவும், தங்குமிடம் மற்றும் ஊழியர்களுக்கான உணவுகளையும் வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு.. இரண்டாம் இடம் பிடித்த நம்ம Marina Bay Sands – Inkifi வெளியிட்ட இன்னும் பல சுவாரசிய தகவல்கள்

அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து திறமைகளும் உள்ளவர்கள் நிச்சயம் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Roti Bar எதிர்பார்க்கும் திறமைகள் என்னென்ன?

ரொட்டி புரட்டுவதில் அனுபவம் இருக்க வேண்டும்

Work Pressure உள்ள சூழலில் வேலை செய்யும் திறன் இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவில் வேலை உரிமையும் பெற்றிருக்க வேண்டும்

Exclusive : தமிழகம் சென்றாலும் விடுவதில்லை.. “புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைக்கும் Scam” – சிங்கப்பூர் போலீஸ் பெயரில் போலி அழைப்புகள் – போட்டு உடைத்த தமிழ் சாகா வாசகர்!

24 நாட்களுக்கு முன்பு இந்த பதிவை போட்டும்கூட இன்றளவும் RotiBar தேடும் சரியான சமையல்காரர் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

பரோட்டா மட்டுமல்லாமல் பல வித இந்திய, மலாய் மற்றும் சிங்கப்பூர் உணவுகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts