TamilSaaga

உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு.. இரண்டாம் இடம் பிடித்த நம்ம Marina Bay Sands – Inkifi வெளியிட்ட இன்னும் பல சுவாரசிய தகவல்கள்

நமது சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் (MBS) தான் தற்போது உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட ஹோட்டல்களில் ஒன்று என்றும், அந்த பட்டியலில் MBS இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றும் ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.

நமது MBSஐ பின்னுக்கு தள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள புர்ஜ் அல் அரப் ஜுமைரா என்ற ஹோட்டல் தான் அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட Hashtag மற்றும் பதிவுகளை ஆய்வு செய்த Inkifi என்ற நிறுவனம் இந்த தகவலை அளித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் 25,53,515 பதிவுகளுடன் புர்ஜ் அல் அரப் ஜுமைரா மிகவும் இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட ஹோட்டல்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே போல 18,75,600 பதிவுகளுடன் நமது Marina Bay Sands இரண்டாவது இடத்தையும், 15,73,707 பதிவுகளுடன் Las Vegas’s Caesar Palace மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதே Inkifi கணக்கெடுப்பின்படி, உலகில் அதிக அளவில் இன்ஸ்டாகிராம் செய்யப்படும் முதல் 10 Skyline பட்டியலிலும் நமது சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூருக்கு 10வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் அடுக்குமாடி வீடு கட்டிய செந்தில், ராஜலட்சுமி ஜோடி.. சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளில் குவிந்த கச்சேரிகளால் மெய்யான கனவு

மேலும் Inkifi நடத்திய கணக்கெடுப்பில் உலக அளவில் அதிகமாக இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட Restaurant பட்டியலில் லண்டனில் உள்ள மல்டி-ரெஸ்டாரன்ட் ஸ்தாபன ஸ்கெட்ச், 83,045 பதவிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 43,922 பதவிகளைக் கொண்ட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லெவன் மேடிசன் பார்க் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

சிங்கப்பூரில் பாஸ்போர்ட் தொடர்பான மோசடி அழைப்புகள்.. “+65” எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் உஷார் – எச்சரிக்கும் ICA

சிங்கப்பூரின் Three-Michelin உணவகம் 5,919 பதிவுகளுடன் அந்த பட்டியலில் 35 வது இடத்தில் உள்ளது. மற்றபடி அதிகம் இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட திரையரங்குகள், கடற்கரைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் ஆகிய பட்டியலில் சிங்கப்பூர் முதல் 50 இடங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts