TamilSaaga

Exclusive : தமிழகம் சென்றாலும் விடுவதில்லை.. “புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைக்கும் Scam” – சிங்கப்பூர் போலீஸ் பெயரில் போலி அழைப்புகள் – போட்டு உடைத்த தமிழ் சாகா வாசகர்!

சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக நமது அரசு பல வித முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வருகின்றது. சிங்கை மனிதவள அமைச்சகமும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு என்று தனி பிரிவுகளை செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மோசடி கும்பல்கள் தொடர்ச்சியாக சிங்கப்பூர் வரும் புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து தங்கள் ஏமாற்று வேலையை கட்டவிழ்த்து வருகின்றன. இந்நிலையல் சிங்கப்பூரில் வேலை செய்து தற்போது தாய்நாட்டில் வசித்து வரும் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகர் ஒருவர் நமக்கு அளித்த ஒரு பிரத்தியேக செய்தியை தற்போது காணலாம்.

ரசாக் ஷரீப் என்ற அந்த தமிழர், பல ஆண்டுகளாக நமது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றார். தற்போது விடுப்பில் தனது சொந்த ஊரான கடலூரில் வசித்துவரும் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு WhatsApp மூலம் ஒரு வீடியோ கால் வந்துள்ளது.

சிங்கப்பூரில் பாஸ்போர்ட் தொடர்பான மோசடி அழைப்புகள்.. “+65” எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் உஷார் – எச்சரிக்கும் ICA

சிங்கப்பூர் போலீஸ் போன்ற உடை அணிந்த ஒருவர் வீடியோ காலில் தோன்ற, அவருடைய பின்னணியில் அச்சுஅசல் சிங்கப்பூர் போலீஸ் துறையை போன்ற அமைப்புகள் இருந்துள்ளன. சற்று பதட்டத்துடன் அந்த அழைப்பை ஏற்றபோது மிகுந்த விழிப்புர்ணர்வுடன் செயல்பட்டுள்ளார் ரசாக்.

அந்த அழைப்பில் தோன்றிய போலி ஆசாமி, ரசாக்கின் Passport, ATM Card மற்றும் NRIC போன்ற தனிப்பட்ட தரவுகளை தன்னிடம் காட்டுமாறு கேட்டுள்ளார். ஆனால் சிங்கப்பூர் போலீஸ் பற்றி நன்கு அறிந்த ரசாக் இது ஒரு போலி அழைப்பு என்பதை உறுதி செய்து, உடனே விவேகமாக செயல்பட்டு அந்த அழைப்பை துண்டித்துள்ளார்.

சிங்கப்பூரே வெறுக்கும் ஒரு கேவலமான “தந்தை”.. பின் பக்கத்தை நையப்புடைக்க “சவுக்கடி” தர உத்தரவு – மன்னிப்பு காட்டாத சிங்கை அரசு

ஆனால் இதுபோன்று பல தொழிலாளர்களிடம் போலி அழைப்புகள் செய்யும்போது, நிச்சயம் விவரம் அறியாத ஏதோ ஒரு தொழிலாளி இந்த மோசடியில் சிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த மோசடி குறித்த விழிப்புணர்வை தொழிலாளர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று ரசாக் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்திக்குழுவிடம் கூறினார்.

இது போன்ற பல போலி அழைப்புகள் உங்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ளது, ஆகவே ரசாக் போல நீங்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று நமது தமிழ் சாகா சிங்கப்பூர் குழு கேட்டுக்கொள்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts