TamilSaaga

“சிங்கப்பூர் Kranji Recreational மையத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டம்” : ஓவியம் வரைந்து மகிழ்ந்த தொழிலாளர்கள்

“சிங்கப்பூரில் உள்ள ACE குழுமத்தின் ஆதரவுடன் எங்கள் சமூகப் பங்காளிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகளில் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நிறைந்த வாரமாக இருந்தது” என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில், Sama Sama, Home For All Migrants நிறுவனம், மற்றும் Welcome In My Backyard ஆகிய நிறுவனங்கள் இணைந்து எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுக்காக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிங்கோ விளையாட்டு மற்றும் போஸ்ட்கார்ட் எழுதுதல் போன்ற செயல்பாடுகளும் நடத்தப்பட்டன. மேலும் இந்த நிகழ்வுகளில் சிறப்பம்சமாக Sama Sama நிறுவனம் DASL எனப்படும் Dormitory Association of Singapore Limited மற்றும் Tee Up Dormitory Pte Ltd ஆகியவை இணைந்து சுவரோவியம் வரைதல் நிகழ்ச்சியை நடத்தியது.

ஹிந்து சமய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று பிரத்தியேக பூஜைகள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கையெழுத்திடுதல், ஓவியம் வரைதல் என்று தொழிலாளர்களுக்கு என்று பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் சமூக வருகைக்காக தொடங்கப்பட்டுள்ள முன்னோடி திட்டத்தின் கீழ் இந்த வருகை இருந்தது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்கள் இந்த நடவடிக்கைகளில் கலந்துகொண்டதும், பார்த்து மகிழ்ந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு ஆதரவளித்த எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி” என்றும் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்தது.

Related posts