TamilSaaga

குப்பைக்கு போகும் 1 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து? – இது தான் காரணம்

இஸ்ரேல் நாட்டில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான Pfizer – BioNTech தடுப்பூசி மருந்துகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் அந்த ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகள் காலாவதி ஆவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் நாட்டுடன் தடுப்பு மருந்துகளை பரிமாறிக் கொள்வது தொடர்பான உடம்பாடு நிறைவேறாமல் போனதால் தற்போது இஸ்ரேல் நாட்டில் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தடுப்பு மருந்துகளின் காலாவதி தேதியை ஒத்தி வைக்குமாறு இஸ்ரேல் அரசு Pfizer நிறுவனத்துக்கு விடுத்த வேண்டுகோளை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது.

இந்த மாதம் 30ம் தேதிக்கு பின் அந்த தடுப்பு மருந்துகள் பயன்படுத்த பாதுகாப்பானவை என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாது என்று Pfizer நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இஸ்ரேல், பாலஸ்தீன் நாட்டுடன் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்ட உடன்பாடு முறிந்து போனது குறிப்பிடத்தக்கது.

Related posts