TamilSaaga

காதலியே எதிர்பார்க்காத நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய காதலன் – “உ.. சொல்றியா.. ஊ.. ஊ.. சொல்றியா மாமா” பாடல் வரிகளை பொய்யாக்கிய நிஜ சம்பவம்

“நெஞ்சிருக்கும் வரை” என்று ஒரு தமிழ் சினிமாவை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அந்த படத்தின் ஹீரோ நரேன், தனது காதலிக்கு கிட்னி தானம் செய்த காட்சியை அப்படியே நிஜமாக்கியுள்ளார் இந்த நிஜ காதலர். ஆனால், கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்ச, இப்போது பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா (Baja California) மாகாணத்தில் வசித்து வருபவர் உசீல் மார்ட்டினெஸ் (Uziel Martínez). இவர் அங்கு ஒரு பெண்ணை மிகத் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். அதுவும் உருகி உருகி காதலித்திருக்கிறார். எந்த அளவுக்கு எனில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது காதலியின் தாய்க்கு தனது ஒரு கிட்னியை தானமாக கொடுக்கும் அளவுக்கு நேசித்திருக்கிறார்.

மேலும் படிக்க – “இயற்கை மரணமல்ல” : சிங்கப்பூர் Upper Bukit Timah பகுதியில் சடலமாக கிடந்த இரு இளம் சகோதரர்கள் – போலீசார் விசாரணை

அறுவை சிகிச்சை மூலம், உசீல் மார்ட்டினெஸின் சிறுநீரகம் அவரது காதலியின் தாய்க்கு தானமாக கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த அறுவை சிகிச்சை முடிந்த ஒரே மாதத்தில், அப்பெண் உசீலை விட்டுப் பிரிந்து வேறொரு நபரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நம்பி காதலித்த பெண்ணுக்காக தனது கிட்னியை கொடுத்து, இப்போது தான் ஏமாற்றப்பட்டிருப்பதால் வேதனையடைந்த உசீல், இந்த சம்பவத்தை தனது சமூக தள பக்கத்தில் வீடியோவாக கொட்டித் தீர்த்துவிட்டார். இதையடுத்து, ஏராளமானோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

Mexico News Daily நியூஸ் வெளியிட்ட தகவலின் படி, மார்ட்டினெஸின் வீடியோவுக்கு பதிலளித்த பார்வையாளர் ஒருவர், “தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து, உங்களைப் பாராட்டும் சரியான பெண்ணைக் கண்டுபிடியுங்கள்” என்று ஆறுதலாக கருத்து தெரிவித்துள்ளார்.

பலரும் மார்ட்டினெஸின் உடல்நலம் குறித்து விசாரித்தும் வருகின்றனர். அதற்கு அவர், “உங்களின் அன்பினால் நான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தேறி வருகிறேன். கிட்னி அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் வங்கி கணக்கு மோசடி” : சேமிப்புகளை இழக்கும் அப்பாவி மக்கள் – களமிறங்கும் சிங்கப்பூரின் SNDGG

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் ஏமாற்றப்பட்ட போதிலும், தனது முன்னாள் காதலியின் மீது எந்த வெறுப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மெக்ஸிகோ டெய்லி நியூஸ் படி, அவர், “அவளுக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை… நாங்கள் நண்பர்கள் அல்ல. அதேசமயம் நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த காலத்திலும் இப்படியொரு காதலா, காதலனா என்பதை நினைக்கும் போது வியப்பாகத் தான் இருக்கிறது. உங்க Life-ல் இப்படி ஏதாவது ஒரு உண்மை காதலை பார்த்து இருக்கீங்களா?

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts