TamilSaaga

சாங்கி ஏர்போர்ட்டில் “Assistant Operator”-ஆக பணிபுரியும் தமிழர் – “போலி FB ஐடி”யில் பணம் கேட்கும் மோசடி கும்பல் – “அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா மாப்ள?” என கலாய்க்கும் நண்பர்கள்

தமிழ்நாட்டின் திருப்பத்தூரைச் சேர்ந்த முகேஷ் கண்ணா என்பவர், சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் “Assistant Operator”-ஆக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவரது பெயரில் போலி அக்கவுண்ட் ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ஒரு மோசடி கும்பல் பணம் கேட்டு வருவது தெரிய வந்துள்ளது.

அச்சு அசல் அவரது உண்மையான fb அக்கவுண்ட் போன்றே அந்த fake id உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம் நண்பர்களே.. யாருக்காவது என் பெயரில் இருந்து நட்பு அழைப்பு வருகிறதா? அது போலி ஐடி. தயவு செய்து பணம் அல்லது ஏதாவது கேட்டால் ஏற்க வேண்டாம். தயவு செய்து பதிலளிக்க வேண்டாம். இந்த ஐடியை தடை செய்யுங்கள்” என்று எச்சரிக்கை செய்து பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, அவரது முகநூல் நண்பர்கள் சிலர், “Celebrity ஆகிட்ட போல.. அதான் fake id-லாம் உருவாக்குறாங்க” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளனர்.

எனினும், முகேஷின் பதிவை அவ்வளவு சாதாரணமாக கடந்து சென்றுவிடக் கூடாது. இப்படிப்பட்ட cyber crime தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆகையால், இதுபோன்று நெருங்கிய நண்பர்களின் ஐடிக்களில் இருந்து பணம் கேட்பது போன்று மெசேஜ் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts