TamilSaaga

சிங்கப்பூர், இந்தியா உள்பட மொத்தம் 20 நாடுகளுக்கு விசா தளர்வுகள்! சுற்றுலாவை அதிகரிக்க இந்தோனேஷியாவின் சூப்பர் முயற்சி!

தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இந்தோனேசியா மிக அழகான மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகும். மொத்தம் 17,508 தீவுகளை உள்ளடக்கிய இந்த நாட்டின் முக்கிய சிறப்பு சுற்றுலா! பல்வேறு இயற்கை அமைப்புகள், கலாச்சார சிற்பங்கள் என இங்கு பார்க்கவேண்டியவை ஏராளம். 

கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த நாட்டின் பல தீவுகளுக்கு நாள்தோறும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் ஏராளம். இந்த நாட்டின் முக்கிய பொருளாதாரம் சுற்றுலா தான். எனவே அதனை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி தான் விசா தளர்வு. 

கொரோனா காலத்திற்கு முன் சராசரியாக ஒரு சுற்றுலா பயணி இந்தோனேசியாவில் செலவு செய்யும் பணம் $900 ஆகும். ஆனால் தற்பொழுது உலகெங்கும் உயர்ந்துள்ள சுற்றுலா ஆர்வம் காரணமாக பல பயணிகள் வந்துசெல்கின்றனர். அதனால் தற்போதைய காலத்தில் சராசரியாக ஒரு பயணி $1600 வரை செலவு செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

இதனை மேலும் மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியா சிங்கப்பூர் உட்பட மொத்தம் 20 நாடுகளுக்கு விசா தளர்வுகளை இந்தோனேசியா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது விசா இல்லாமல் குறிப்பிட்ட காலம் வரை தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வர இந்தோனேசிய அரசாங்கம் அனுமதிக்கிறது. 

ஏற்கனவே ஆஸ்திரேலியா, சீனா (PRC), இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, யுகே, பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், சவூதி அரேபியா, நெதர்லாந்து, ஜப்பான், ரஷ்யா, தைவான், நியூசிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் விசா இல்லாமல் சுற்றுலா வர அனுமதிக்கப்பட்ட நிலையில்,
தற்பொழுது புருனே தருசலாம், கம்போடியா, லாவோஸ் பி.டி.ஆர், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட மேலும் 8 நாடுகளை சேர்த்து மொத்தம் 20 நாடுகளுக்கு இந்த விசா அற்ற சுற்றுலா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனை அக்டோபர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அக்டோபர் மாதம் ஆட்சி மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர், Sandiaga Uno தெரிவித்துள்ளார். 

இந்த முயற்சி மேலும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts