TamilSaaga

Migrant Worker-களுக்கு நம்பிக்கையளித்த Singapore-ன் இந்த Silent Hero-வைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

Silent Hero என்ற பெயரில் வருடம் தோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது சிங்கப்பூர் Civilian Committee. அதில் முக்கிய விருதான Compassionate Foreigner என்ற பிரிவில் வங்காள தேசத்தைச் சார்ந்த ஒருவர் விருதை வென்றுள்ளார். 

Shafiqul Islam – Shafiqul பாய் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் தான் 2023-ம் ஆண்டிற்கான Compassionate Foreigner என்ற விருதை வென்றுள்ளார். 

கொரோனா காலத்தில் இருந்து வங்காள தேசத்தில் இருந்து சிங்கப்பூர் வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் உலகமே பயத்தில் இருந்தது. அப்பொழுது நம்பிக்கையிழந்திருந்த பல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இவர் நம்பிக்கையூட்டியதுடன் அவர்களது தேவைகளையும் கேட்டறிந்து அதனை நிறைவேற்ற முயற்சித்து வந்துள்ளார். 

முகநூலில் Singapore to Dhaka என்ற பெயரில் ஒரு பக்கத்தை இவர் நடத்தி வருகிறார். அதன்மூலம் வங்க தேசத்து தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரின் அனைத்து செய்திகளையும் மொழிமாற்றம் செய்து தெரியப்படுத்தி வருகிறார். MOM, MOH மற்றும் பல செய்தித் தளங்களில் வரும் முக்கிய செய்திகள் இந்தப் பக்கத்தில் பகிரப்படும். இந்தப் பக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர்கிறார்கள். 

மேலும் பல்வேறு தன்னார்வ மற்றும் தன்னலமற்ற சேவை அமைப்புகளுடன் இணைந்து வங்கதேச ஊழியர்களின் தேவைகளையும் அவர்களது இடையூறுகளையும் கேட்டறிந்து அதனைத் தீர்க்க வழிகாட்டி வருகிறார். மேலும் அவர்களின் மனநலம், மருத்துவம் மற்றும் பல அத்தியாவசியங்களையும் சந்திக்க இந்த அமைப்புகளுடன் இணைந்து உதவி புரிந்து வருகிறார். 

தொழிலாளர்களின் நலனுக்காக MWC, MOM மற்றும் Singtel ஆகியவற்றுடன் இணைந்து பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்து அதனை நடத்தி வருகிறார். முதல் முறையாக ரம்ஜான் மாதத்தில் இஃப்தார் எனப்படும் நோன்புக் கால நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்வுக்கான செலவு சக புலம்பெயர் தொழிலாளர்களே ஏற்றுக் கொண்டனர். 

மேலும் மோசடிகளுக்கு எதிரான விழிப்புணர்வை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்த சிங்கப்பூர் காவல் அதிகாரிகளுடன் இணைந்து உதவியுள்ளார். Wandering Dervishes எனப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மாதாந்திர மருத்துவ ஆலோசனை அமைப்பில் உறுப்பினராகவும், தன்னார்வ தாய்வராகவும் Shafiq இருந்து வருகிறார். இந்த மருத்துவ ஆலோசனை அவரவர் தாய்மொழிக்கு ஏற்றவாறு தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது. 

சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நம்பிக்கையாக விளங்கும் Shafiq-க்கு கடந்த செப்டம்பர் 28 அன்று 2023-ம் ஆண்டிற்கான Silent Hero விருதை துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான Lawrence Wong வழங்கினார். 

நாம் நாள்தோறும் காணும் பல மக்களுள் இது போன்ற சிறந்த ஹீரோக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து சிறப்பான செயல்களை இயற்றி வருகின்றனர். அதனால் தானோ என்னவோ இவர்கள் Silent Hero-க்களாக இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து இது போல் அங்கீகாரம் கொடுக்கும் சிங்கப்பூர் Civilians Association-ன் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதே!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts