அண்டை நாடான இந்தியாவில் லாட்டரி சீட் விற்பனை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் நமது சிங்கப்பூர் துவங்கி அமெரிக்கா மற்றும் அமீரகம் போன்ற பெரிய நாடுகளில் இன்றளவும் இந்த லாட்டரி விற்பனை அரசு ஒப்புதலோடு நடந்து வருகின்றனது.
அதை வாங்கும் மக்களுக்கும் பல சமயங்களில் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு தான் கொடுக்கிறது என்பதில் மாற்றம் ஏதும் இல்லை. அந்த வாகையில் வெளிநாட்டில் வேலை செய்து வரும் தமிழர் ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் ஒரு முறை அல்ல இரண்டு முறை அடித்துள்ளது, அதுவும் வெறும் 3 வார இடைவெளியில்.
துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் தமிழர் தான் மனோஜ் மதுசூதனன், துபாயில் நடக்கும் Emirates Drawவில் லாட்டரி வாங்கும் பழக்கமும் மனோஜிற்கு இருந்து வந்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவருக்கு கடந்த 3 வாரங்களில் மட்டும் இரண்டு முறை லாட்டரி அடித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த Raffle Drawவில் மனோஜ் சரியாக 77,777 திர்ஹம் வென்று வசதியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம். அதுமட்டுமா இவர் 17 லட்சம் ஜெயித்த 3 வாரத்துக்குள் மீண்டும் அதே 17 லட்சத்தை Raffle Drawவில் வேண்டு அசத்தியுள்ளார்.
நான் இரண்டு முறை வெற்றிபெற்றதை இன்று வரை என்னால் நம்பமுடியவில்லை என்று கூறுகின்றார் மனோஜ். அமீரகத்தில் வசித்தாலும் தனது தாய் நாட்டிற்கு இந்த பணத்தை கொண்டு நிச்சயம் உதவி செய்வேன் என்று கூறியுள்ளார் அவர்.