நேற்று புதன்கிழமை (டிசம்பர் 15) மலேசியாவின் ஜோகூர் கடல் அருகே புயலில் சிக்கிய படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 இந்தோனேசிய குடியேற்றவாசிகள் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகில் இந்தோனேசியாவின் லோம்போக்கில் இருந்து 50 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் BERNAMA செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : கோத்தபாய ராஜபக்ச, சிங்கப்பூர் Mount Elizabeth மருத்துவமனையில் அனுமதி
படகில் இருந்த மேலும் 14 பேர் காப்பாற்றப்பட்டனர், இருப்பினும் மேலும் 25 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. தப்பிப்பிழைத்தவர்கள் தஞ்சோங் பாலாவ் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டு, கோட்டா டிங்கியில் உள்ள தஞ்சோங் செபாங் மலேசிய ஆயுதப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காணாமல்போனவர்களை மீட்க மலேசிய அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் கரையில் ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்களைக் கண்டுபிடித்ததாக கடலோர காவல்படையின் தலைவர் அட்மிரல் முகமட் ஜூபில் மாட் சோம் AFP இடம் தெரிவித்தார். மேலும் காணாமல் போனவர்கள் தப்பியோடி மறைந்திருக்கலாம் அல்லது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் அவர்களை தேட அதிகாரிகள் படகுகளையும் விமானத்தையும் அனுப்பியுள்ளனர்.
“இந்த சோகமாக சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று அட்மிரல் முகமட் ஜூபில் AFPயிடம் கூறினார். மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் என்று புலம்பெயர்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
சொந்த நாட்டில் வாழ வழியின்றி இப்படி கள்ளக்குடியேறிகளாக நாடு கடக்கும் மக்கள் இப்படி பரிதாபமாக இறப்பது நெஞ்சை உறையவைக்கின்றது.