TamilSaaga

“இன்று முதல் சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை” – சிங்கப்பூரை High Risk பட்டியலில் சேர்த்த “அந்த” நாடு

சிங்கப்பூர்வாசிகள் இன்று வியாழன் (டிசம்பர் 16) முதல் இத்தாலிக்குச் செல்ல முடியாது. சிங்கப்பூரில் உள்ள இத்தாலிய தூதரகம் நேற்று புதன்கிழமை தனது சுகாதார அமைச்சகம், சிங்கப்பூர் மற்றும் புருனேயை கோவிட் -19 நோய்த்தொற்றுக்கான அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலுக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வேலை, உடல்நலம் அல்லது படிப்புக் காரணங்களுக்காக மட்டுமே இத்தாலிக்குள் நுழையலாம். அவசர வேலை அல்லது தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம், இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் SOFA தொழிற்சாலையில் வேலை

அதேபோல சுற்றுலாப் பயணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அவருடைய துணை இத்தாலியில் தங்கியிருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே இத்தாலிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்ட முகவரியில் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள், விமான நிலையங்களுக்குள் நியமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறாமல், இத்தாலியின் விமான நிலையங்கள் வழியாக மற்ற இடங்களுக்குச் செல்ல முடியும். இந்த கட்டுப்பாடுகள் இந்து வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாலி அரசு ஏன் சிங்கப்பூரை அதிக ஆபத்துல்ல நாடுகளின் பட்டியலில் இணைத்து என்று குறிப்பிடவில்லை.

சிங்கப்பூர் கடந்த அக்டோபர் 19 அன்று இத்தாலியுடன் தடுப்பூசி போடப்பட்ட பயண பாதையை (VTL) தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இத்தாலியுடனான சிங்கப்பூரின் VTL ஒருதலைப்பட்சமாக இருப்பதால், இத்தாலியின் சமீபத்திய நடவடிக்கை நாட்டிலிருந்து குடியரசிற்குள் தனிமைப்படுத்தப்படாத நுழைவை உடனடியாக பாதிக்காது. இதன் பொருள், தற்போது இத்தாலியில் இருக்கும் தகுதியான பயணிகள், சுயமாக தனிமைப்படுத்தாமல் சிங்கப்பூருக்குள் நுழைய VTLஐப் பயன்படுத்த முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts