TamilSaaga

சிங்கப்பூர் வர ஏஜெண்ட்டிடம் பணம் கொடுத்துள்ளீர்களா? உங்கள் ஏஜென்சி நம்பகமானதா என்று தெரியணுமா? ஜஸ்ட் இங்கே 1 க்ளிக் பண்ணுங்க!

SINGAPORE: இன்றைய சூழலில், ஏஜெண்ட்ஸ் இல்லாமல் சிங்கப்பூர் வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. Linked In, Job Street போன்ற சிறப்பான தளங்கள் சிங்கையில் வேலை பெற உதவினாலும், அதன் மூலம் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. 90 சதவிகிதம் பேர் ஏஜென்ட் மூலமாகத் தான் வருகிறார்கள்.

எல்லா துறையிலும் அசல், போலிகள் இருப்பதைப் போல இந்த சிங்கப்பூர் வேலை வாய்ப்பிலும் போலிகள் நிறைய உள்ளனர். அவர்களை கண்டறிவது தான் மிகவும் சிரமமான ஒன்று. “ஜஸ்ட் 10,000 மட்டும் அட்வான்ஸ் கட்டினால் போதும்” என்று சொல்வார்கள். சரி.. 10,000 தானே என்று நாமும் செலுத்திவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருப்போம். மாதக் கணக்கானாலும் இதோ, அதோ என்பார்கள்.. நம்மால் நமது ஊரை கூட தாண்டியிருக்க முடியாது. இப்படி உங்களிடம் 10,000 வாங்கியது போல் 10 பேரிடம் வாங்கினால் கூட 1 லட்சம் ஆகிவிடும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

எனினும், ஏஜென்சிகள் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள உங்களாலும் முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்வதன் மூலம், வெளிநாட்டு ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சிங்கப்பூர் தொழிலாளர்கள் மற்றும் PRக்காக இருக்கும் ஏஜென்சி குறித்து இதில் நீங்க தேடிக்கொள்ள முடியும். கஷ்டமர் ரேட்டிங், அவர்களின் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களால் ஒரு ஏஜென்சியை தேட முடியும்.

வரும் ரிசல்ட்டில் இருக்கும் ஏஜென்சியின் பெயருக்கு அருகில் இருக்கும் arrowஐ க்ளிக் செய்தால் அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். எத்தனை பேர் retention மற்றும் transfer வாங்கி இருக்கிறார்கள் என அனைத்து தகவல்களும் தெரிந்து விடும். அதில் ஏஜென்சியின் முகவரி மற்றும் தொடர்பு எண் கூட இருக்கும். இதே நடைமுறையில் தான் வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஏஜென்சியினை குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

இதில் சரியில்லாத ஏஜென்சியினை உங்களால் தவிர்த்து கொள்ள முடியும். Under Revocation/Suspension/ Surveillance செக்‌ஷனில் இருக்கும் ஏஜென்சி தவிர்த்து விடுங்கள். இதை MOM தரப்பிலேயே தெரிவித்து இருக்கிறார்கள். முக்கியமாக ஏஜென்சியினை தேர்வு செய்யும் போது அவர்களின் அனுபவத்தினை கருத்தில் கொள்ளுங்கள். ஒரு நிறுவனம் பல வருடமாக அந்த தொழில் இருக்கிறார்கள் என்றால் அவர்களை நம்ப முடியும். தவறு செய்திருந்தால் அவர்களால் அந்த தொழில் தாக்குப்பிடிக்க முடியாது தானே. இதனால் Experience செக்‌ஷனில் அதிகமாக இருக்கும் ஏஜென்சியினை தேர்வு செய்வது உங்களுக்கு வேலை கிடைப்பதினை துரிதப்படுத்தும்.

இதில் சில ஏஜென்சி மீது demerit points எனக் குறிப்பிட்டு இருக்கும். இது சிங்கப்பூர் அரசின் விதிகளை சரியாக பின்பற்றாதவர்களுக்கே இதுப்போல குறிப்பிடப்பட்டு இருக்கும். அவர்களையும் தவிர்த்து விடுவது நல்லது. ஏஜென்சி லிஸ்ட்டினை மொத்தமாக download செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.mom.gov.sg/eservices/services/employment-agencies-and-personnel-search இந்த லிங்கினை க்ளிக் செய்யுங்கள். இதில் search என்ற ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்தால் வேறு ஒரு பக்கம் திறக்கும். அதில் “Foreign Domestic Worker” , “Foreign Worker” என்று இரு ஆப்ஷன் இருக்கும். இதில், உங்களுக்கு தேவையான ஆப்ஷனில், உங்களின் சிங்கப்பூர் ஏஜென்சியின் பெயரை குறிப்பிட்டால் அவர்கள் குறித்த எல்லா தகவலும் வந்து விடும். Mom தளத்திலேயே இதில் எப்படி தேடலாம் என்பது குறித்து கூட ஒரு user guide இருக்கும். தேவைப்பட்டால் நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts