PETA என்ற விலங்குகள் ஆர்வலர் நிறுவனத்தை நாம் நிச்சயம் அறிந்திருப்போம், இந்த நிறுவனம் தற்போது இந்தோனேசியாவில் உள்ள சில ஊர்வன இறைச்சிக் கூடங்களில் எடுக்கப்பட்ட கொடூரமான சில புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது நமது நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது. ஆடம்பர பாணியில் பொருட்களை தயார் செய்யும் GUCCI மற்றும் Louis Vuitton ஆகிய நிறுவனங்கள் மனிதாபிமானமற்ற முறையில் எடுக்கப்படும் ஊர்வன தோல்களை இந்த இறைச்சிக் கூடங்களிடம் வழங்குவதாகவும் PETA குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் 65 உறுதிப்படுத்தப்பட்ட Omicron வழக்குகள்”
PETAவின் ஊடக வெளியீட்டின் படி, ஆசியாவில் நடந்த இரகசிய விசாரணைகளின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் படமாக்கப்பட்டுள்ளன. (அந்த வீடியோவை காண.. – விலங்குகள் உயிருடன் வெட்டப்படும் காட்சிகள் உள்ளதால், இளகிய மனம் படைத்தோர் பார்க்கவேண்டாம்) இறைச்சி வெட்டப்படும் நிலையம் ஒன்றில் பல்லிகள் கொல்லப்பட்டு அவற்றின் தோள்கள் GUCCIக்கு வழங்கப்படுவதாக PETA குற்றம்சாட்டியுள்ளது.
அந்த வீடியோவில் உயிருடன் உள்ள பல்லிகள் பல பெட்டிகள் மற்றும் சாக்கு பையில் கொண்டுவரப்படுகின்றன. கால்கள் அனைத்தும் முழுமையாக கட்டப்பட்டுள்ள நிலையில் இருக்கும் அந்த பல்லிகளை கையில் இருக்கும் கத்தியால் அதன் தலையில் பல முறை அடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் ரத்த குளத்தில், பல பல்லிகளின் உடல்கள் தலையின்றி கிடக்கும் கட்சிகளும் உயிருடன் பைகளில் இருந்து எடுக்கப்படும் பல்லிகளின் தலைகள் அப்படியே வெட்டப்படுகிறது. உடலில் இருந்து தலை வெட்டப்பட்ட பின்னரும் சில பல்லிகள் அந்த வலியோடு நகர்வதை காண முடிகிறது.
இந்த PETAவின் இரகசிய விசாரணைகள் இந்தோனேசியாவில் உள்ள ஒரு பாம்பு கொல்லும் நிலையத்தில் இதேபோன்ற கொடூரமான காட்சியை எடுத்துள்ளது. மேலும் இந்த நிலையம் Louis Vuitton நிறுவனத்திற்கு பாம்பு தோலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. தாடைகளில் கயிறு கட்டப்பட்டிருக்கும் நிலையில் ஐந்து மலைப்பாம்புகள் ஒரு மரக் கட்டையில் இருந்து தொங்குவதை நம்மால் இந்த பதிவில் பார்க்கமுடிகிறது.
பாம்புகளின் வாய் மற்றும் ஆசனவாய், கயிற்றால் கட்டப்பட்டிருப்பதாக PETA விவரித்துள்ளது. ஒரு தொழிலாளி பாம்பின் தொண்டையில் நீர் குழாயைச் செருகிய அந்த வயிறில் நீரை கொடூரமாக நிரப்புகிறார். இது அதன் தோலை விரைவாக உரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. அவற்றின் உடலில் இருந்து தண்ணீர் வெளியேறிய பிறகு, மலைப்பாம்புகள் சிறிய பிளேடால் உரிக்கப்பட்டன. ஒரு தொழிலாளி மலைப்பாம்பை அதன் தலையில் பலமுறை சுத்தியலால் தாக்கியதும் அந்த காணொளியில் பிடிபட்டுள்ளது. மேலும் இந்த செயல்களின்போது பாம்புகள் உயிருடன் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Source : Mothership.sg