TamilSaaga

“சிங்கப்பூரில் 65 உறுதிப்படுத்தப்பட்ட Omicron வழக்குகள்” : இதில் VTL மூலம் சிங்கப்பூர் வந்த 53 பேர் அடங்குவர் – MOH

சிங்கப்பூரில் 65 உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரான் நோயாளிகளில் ஐம்பத்து மூன்று பேர் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் (VTLs) வழியாக சிங்கப்பூருக்கு வந்தடைந்ததாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. VTLகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்த இந்த 53 வழக்குகளில், 41 நோய்த்தொற்றுகள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் PCR சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டன. மீதமுள்ள 12 நோய்த்தொற்றுகள் VTL பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சோதனை முறை மூலம் பின்னர் கண்டறியப்பட்டன என்று CNAவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக MOH தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : Designer பொருட்களை பறிகொடுத்த தாய் மற்றும் மகள்

VTLகள் வழியாக வந்த ஓமிக்ரான் வழக்குகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால குடியிருப்பாளர்கள் என்று சுகாதார அமைச்சகம் மேலும் கூறியது. மீதமுள்ள 10 சதவிகித உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஓமிக்ரான் வழக்குகள் எந்த நாடுகளில் இருந்து வந்தன என்று MOH கூறவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 65 நோய்த்தொற்றுகள் மற்றும் ஆறு உள்ளூர் நோய்த்தொற்றுகள் உட்பட 71 உறுதிப்படுத்தப்பட்ட Omicron வழக்குகள் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாக MOH கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Omicron பரவலை உடனடியாக தடுக்க Active Contact Tracing மூலம் ஓமிக்ரான் கேஸ்களை ரிங்ஃபென்சிங் செய்வதாக அமைச்சு கூறியது. “சந்தேகத்திற்குரிய மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஓமிக்ரான் வழக்குகள் இரண்டின் நெருங்கிய தொடர்புகள் பரவுவதைக் குறைக்க பிரத்யேக வசதிகளில் அவர்கள் 10 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள்” என்று MOH தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் “விரைவான பரவலுக்கு” மத்தியில் கடந்த வியாழன் முதல் ஜனவரி 20, 2022 வரை VTL விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனைகளையும் சிங்கப்பூர் முடக்கியுள்ளது. இது சிங்கப்பூர், இறக்குமதி செய்யப்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 20, 2022க்குப் பிறகு VTL ஒதுக்கீடுகளும் பயணத்திற்கான டிக்கெட் விற்பனையும் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts