TamilSaaga

Omicron கிளஸ்டர் : 10 நாட்களுக்கு மூடப்படும் சிங்கப்பூர் Anytime Fitness உடற்பயிற்சி நிலையம் – சுகாதார அமைச்சகம்

சிங்கப்பூரில் முதல் சந்தேகத்திற்குரிய Omicron கிளஸ்டர் கண்டறியப்பட்ட ஒரு உடற்பயிற்சி கூடத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட் சிங்கப்பூர் (SportSG) அமைப்பு கோவிட்-19 பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை (SMM) கடைப்பிடிக்கவில்லை என்பதைக் கண்டறிந்த பிறகு அந்த உடற்பயிற்சி நிறுவனத்தின் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. புக்கிட் டிமா ஷாப்பிங் சென்டரில் உள்ள Any Time Fitness குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 22 முதல் 10 நாட்களுக்கு மூடப்படும் என்றும் SportSG நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் 65 உறுதிப்படுத்தப்பட்ட Omicron வழக்குகள்”

இந்த விஷயத்தில் விசாரணைகளுக்குப் பிறகு, SportsSG அந்த குறிப்பிட்ட ஜிம்மில் நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க தவறிவிட்டதைக் கண்டறிந்தது, மூன்று COVID-19 வழக்குகள் இந்த ஜிம்முடன் இணைக்கப்பட்டுள்ளன, அவர்களில் இருவர் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு “முதன்மையாக நேர்மறை” சோதனை செய்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாயன்று கூறியது.

பாதிப்புக்குள்ளான அந்த மூன்று பேரும், புக்கிட் திமா ஷாப்பிங் சென்டரில் உள்ள அந்த Any time Fitness உடற்பயிற்சி நிலையத்தை கடந்த டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 17-க்கு இடையில் பார்வையிட்டது கண்டறியப்பட்டது என்று MOH தெரிவித்துள்ளது. இந்நிலையில் “SportSG அனைத்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆபரேட்டர்கள் மற்றும் புரவலர்களை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறது மற்றும் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வைக்கப்பட்டுள்ள SMM-களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று அமைச்சகம் கூறியது.

“SMM-களுக்கு இணங்கத் தவறும் வணிகங்கள் அல்லது தனிநபர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts