TamilSaaga

River Valley School மாணவர் இறப்பு எதிரொலி: “வளாக பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்” – கல்வி இயக்குனர் கருத்து

சிங்கப்பூர் River Valley High School வளாகத்தில் கடந்த திங்களன்று நடந்த மாணவரின் இறப்பை தொடர்ந்து கல்வி அமைச்சகம் (MOE) விழிப்புடன் செயல்படும் என்று கல்வி இயக்குனர் ஜெனரல் வோங் சீவ் ஹுங் தெரிவித்தார்.

“இயற்கையாகவே, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சில பெற்றோர்கள் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புரிந்துகொள்ளக் கூடிய மனநிலையில் உள்ளனர்” என திரு.வோங் கூறினார்.

“மாணவர்களின் பாதுகாப்பு என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியமானது. கல்வி அமைச்சகம் எப்போதும் பள்ளிகளின் வளாகத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட “நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள்” ஆகியோர் செவ்வாய் கிழமையன்று உளவியல் மற்றும் அதிர்ச்சி மேலாண்மை முதலுதவி பெறுவதற்காக அழைக்கப்பட்டார்கள் என திரு வோங் கூறினார்.

“சிலர் ஏற்கனவே நேற்று இந்த உதவியை கேட்டு அணுகியுள்ளனர்” என்று அவர் கூறினார். பயிற்சி பெற்ற MOE நிபுணர்கள் மற்றும் பள்ளி ஆலோசகர்கள் மூலம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என கூறினார்.

Related posts