டெல்லி கிரிக்கெட் வீரராக உள்ள சுபேத் பாட்டி ஒரு புதிய வரலாற்றை படைத்துள்ளார். T20 போட்டியில் இரட்டை சதம் அடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பொதுவாகவே T20 அனைவராலும் விரும்பப்படும் ஒரு வகை கிரிக்கெட் போட்டி. பேடஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செலுத்த பவுலர்கள் ஸ்பின், தூஸ்ரா, பவுன்சர் மற்றும் கேரம் போன்ற பல வகை பந்துகளை தனது ஆயுதமாக இறக்குவார்கள்.
இருந்தாலும் பட்டியலில் மேலுள்ள வீரர்கள் குறுகிய பந்துகளில் அதிக ரன்களை அடிப்பது பல முறை நிகழ்ந்துள்ளது.
சுபேத் பாட்டி அவர்கள் 79 பந்துகளில் சுமார் 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சாதித்துள்ளார். T20 போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் முதல் நபர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
டெல்லி 11 சிம்பா அணிக்கு எதிரான ஒரு க்ளப் போட்டியில் அவர் இந்த அசாதாரண சாதனையை படைத்துள்ளார்.