TamilSaaga

“சின்ன கண்கள் இருந்தா மாடலிங் பண்ணகூடாதா?” : இணையத்தில் வெடித்த சர்ச்சை – கடுப்பான மாடல் அழகி Cai Niangniang

Body Shaming என்பது பரவலாக உலக அளவில் உள்ள ஒன்று. அதிக எடை, குறைந்த எடை, உடல் அமைப்பு, நிறம் என்று எல்லாவற்றுக்கும் Body Shaming செய்யக்கூடிய மக்கள் பரவலாக இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோல சாமானியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறை பிரபலங்களும் இந்த Body Shaming என்பதை தாண்டித்தான் சாதிக்கின்றனர். இந்நிலையில் “சீன நாட்டை அவமதிக்கும்” விளம்பரங்களைப் பற்றிய ஆன்லைன் விவாதத்தில் சிக்கிய ஒரு சீன மாடல், தற்போது தனது விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள், வேறு நிறுவனத்திற்கு மாறவேண்டுமா? – அனைத்து வகையான Passக்கும் Apply செய்யலாம்

காய் நியாங்னியாங் என்று அழைக்கப்படும் அந்த மாடல் அழகி தனது “சிறிய கண்களால்” சீனாவை அவமரியாதை செய்வதாக குற்றம் சாட்டிய சமூக ஊடக பயனர்களுக்கு பதிலளிக்கும் விதமாக “எனக்கு சின்ன கண்கள் இருப்பதால் நான் சீனர் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு மாடலாக தனது வேலையை எளிமையாக செய்து வருவதாகவும், சீனாவை எப்படி அவமதித்துள்ளார் என்பது தனக்கு புரியவில்லை என்றும் அவர் மேலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“எனது கண்கள் எப்படி இருக்கிறதோ, அதைவிட நிஜ வாழ்க்கையில் இன்னும் சிறியதாகத் தான் இருக்கும். என் கண்கள் சின்னதாக இருக்கிறது என்பதற்காக நான் மாடலிங்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது என்று அர்த்தமா? இப்படிப் பிறந்து சீனாவை அவமதித்துவிட்டேனா? அப்படியானால் உங்கள் அனைவரின் மீதும் பாரபட்சமாக வழக்குத் தொடரலாமா?”. நாம் நம் நாட்டை நேசிக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்! ஆனால் எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் வம்புகளை எழுப்புவது சரியில்லை! என்று வென்குண்டு பல கேள்விகளை முன்வைத்துள்ளார் அந்த மாடல் அழகி.

“அமெரிக்காவில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற வழக்கு” – சிங்கப்பூரில் இரு “இந்தியர்கள்” மீது குற்றச்சாட்டு

அதே நேரத்தில் அந்த மடலுக்கு சாதகமாகவும் பலர் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த விளம்பரத்தை தற்போது ஒரு நெட்டிசன் மீண்டும் ஷேர் செய்த நிலையில் இந்த விஷயம் பெரிய அளவில் வெடித்துள்ளது. அந்த விளம்பரத்தில் மேற்கத்திய கலாச்சாரம் அதிக அளவில் காணப்பட்டதும் நெட்டிசன்கள் கொதித்தெழ ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆன்லைன் சர்ச்சைக்கு பதிலளித்த அந்த நிறுவனம், காய் நியாங் நியாங்கின் முக அம்சங்களின் அடிப்படையில் மேக்கப் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினர். மேலும் இதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டு அந்த பதிவை நீக்குவதாகவும் கூறியுள்ளது.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான அழகியல் வேறுபாடு தான் இந்த விஷயத்தின் மையமாக உள்ளது என்பதை நம்மால் உணரமுடிகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts