TamilSaaga

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினருக்கு ஒரு “Good News”.. இனி தானியங்கி குடியேற்ற அனுமதியை பெற வாய்ப்பு – ICA வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, சிங்கப்பூருக்கு முதல்முறையாக வந்து தங்கள் முக மற்றும் கருவிழிப் பயோமெட்ரிக்களை பதிவுசெய்த வெளிநாட்டுப் பயணிகள், அடுத்தடுத்த அவர்களின் பயணங்களில் சிங்கப்பூர் வரும்போது தானியங்கி குடியேற்ற அனுமதியை பயன்படுத்த முடியும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (மே 6) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை அளித்துள்ளது ஆணையம், தற்போது அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து முதல்முறையாக சிங்கப்பூர் வருபவர்கள் நாட்டிற்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் கவுண்டரில் குடிவரவு அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ICA ஆல் அதன் வருடாந்திர பணித் திட்டக் கருத்தரங்கின் போது அறிவிக்கப்பட்ட இந்த முயற்சி, வரும் 2023 முதல் அனைத்து பயணிகளுக்கும் இந்த தானியங்கி அனுமதி முறையை செய்லபடுத்த இலக்காக கொண்டுள்ளது என்றே கூறலாம்.

சிங்கப்பூர் வாசிகள் இனி சிங்கப்பூரில் இருந்து வெளியேறினாலும் அல்லது உள்நுழைந்தாலும் எதிர்காலத்தில் தங்கள் கடவுச்சீட்டுகளை சமர்ப்பிக்கத் தேவையில்லாமல் குடியேற்றத்தை முடிக்க முடியும் என்று ICA முன்பு கூறியது நினைவுகூரத்தக்கது.

சிங்கப்பூர்.. பாடுபட்டு உழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சைக்கிள் – உழைப்பாளிகளுக்கு தோல் கொடுக்கும் சிங்கை தொண்டு நிறுவனம்

அவர்கள் அனுமதி வாயில்கள் (Clearance Gates) வழியாக செல்லும்போது கருவிழி மற்றும் முக பயோமெட்ரிக்ஸ் மூலம் அவர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்படும். கருத்தரங்கில் பேசிய உள்துறை இணை அமைச்சர் முஹம்மது பைசல் இப்ராஹிம், இந்த ஆண்டு இறுதிக்குள் சாங்கி விமான நிலையத்தில் ICA சிறப்பு உதவிப் பாதைகளை அமைக்கப்படும் என்றார்.

2023ம் ஆண்டு இறுதிக்குள் 5,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த புதிய பொறுப்புகளை ஏற்க பயிற்சி அளிக்கப்படுவார்கள் என ICA தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts