23நிமிடத்தில் கயற்றில் 14அடி உயரம் வேகமாக ஏறி சோழன் உலக சாதனை படைத்த சிறுவன்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சூராக்குளம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்,
கற்பகவள்ளி ஆகியோரின் இரண்டாவது மகன்தான் சாலிவாகனன் 5வயதை நிரம்பிய சாலிவாகனன்க்கு கயிறு ஏறுவதில் ஆர்வம் அதிகம்.
கடந்த ஒரு வருடங்கள் முன் சாலிவாகனன் பெற்றோர் மரத்தடியில் சேலையை ஊஞ்சல் ஆடுவதற்காக கட்டி உள்ளனர். சாலிவாகனின் அக்கா யாழிலரசி ஊஞ்சல் ஆடும் போது சாலிவாகனன் மட்டும் ஊஞ்சல் ஆடமால் சேலையை பிடித்து விறு விறு என்று மேலே ஏறி உள்ளான் இதை தொடர்ந்து கவனித்த சாலியவாகனன் பெற்றோர் கயிற்றை மரத்தில் 14அடிவரை கட்டி கொடுத்து ஏற சொல்லி உள்ளனர் கயிறு ஏறுவதற்கு முன் சில உடற்பயிற்சிகள் செய்கின்றான் பின்னர் கயிற்றிலும் ஏறுவதற்கு தயார் ஆகிய உடனே வேகமாகவும் ஏறி உள்ளான்.
மேலும் ஏற்கனவே இந்திய புக் ரெகார்ட்ஸ் படி 5வயது சிறுவன் 60செகண்டில் 20 அடிவரை ஏறி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆனால் சாலிவாகனன் 23செகண்டில் 14அடி வரை வேகமாக கயிறு ஏறி உள்ளான் இதனை பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர் ஆனால் மாவட்ட விளையாட்டுத்துறை 14வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுக்கபடும் என்று தெரிவித்து புறகணித்து உள்ளனர். ஆனால் சாலிவாகனன் பெற்றோர்கள் கூறும்போது கயிறு ஏறுவதில் இப்போதே ஆர்வமாக உள்ளான் என்றும் முறையாக பயிற்சி அளித்து வந்தனர்
இதனைக் கண்ட சோழன் உலக சாதனை புத்தக நிறுவன தலைவர் நீலமேகம் சிறுவனின் பெற்றோரை அணுகி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலையில் நேற்று உலக சாதனை நிகழ்வு பதிவு செய்தனர்.