TamilSaaga

“1 லட்சம் சம்பளம் பத்தல; 2 லட்சம் வேண்டும்”.. விலைவாசியை காரணம் காட்டி வேண்டுகோள் வைக்கும் MLA-க்கள்

சிங்கப்பூரை பொறுத்தவரை 10 வெள்ளியை சம்பாதிக்க ஒவ்வொரு உழைக்கும் மக்களுக்கும் படும் வலி நாம் அறிந்ததே. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் பிற நாட்டு ஊழியர்கள் மாதம் 500 வெள்ளியை சம்பாதிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அந்த வகையில் இன்று மனிதனின் வாழ்க்கை அவ்வளவு கடுமையாகியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ ஒருவர் சட்டமண்டத்தில் பேசிய சில விஷயங்களை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் அவை கூடியதும் பேச துவங்கிய அந்த எம்.எல்.ஏ தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பத்தாது, குறைந்தது 2 லட்சம் ரூபாய் மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறிகின்றார்.

MLA Speech

மேலும் அரசு முத்திரை பதித்த கார் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பணிநிமித்தமாக வெளியூர் செல்லும்போது ஒதுக்கப்படும் தங்கும் அறைகளின் முன்பதிவு சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்.

“உள்நாடோ.. வெளிநாடோ.. எல்லா ஊழியர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பு” : சிங்கப்பூரில் அதிகரித்த பணியிட உயிரிழப்புகள் – வருத்தப்பட்ட பிரதமர் லீ

சட்டமன்ற நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது ஊட்டி போன்ற இடங்களில் நடத்தப்பட வேண்டும், டோல் பூத்களை கடந்து செல்ல பயன்படும் Fast Tag சீட்டு, உறுப்பினர் பயணிக்கும் அனைத்து கார்களிலும் இயங்கும் வண்ணம் வசதி செய்து தரவேண்டும் என்று பல கோரிக்கைகளை அவர் முன்வைக்க சட்டமன்றத்தில் சற்று சிரிப்பலை எழுந்தது.

சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையா? – இலவசமாக கற்றுத்தர முன்வந்துள்ள பிரபல தொண்டு நிறுவனம்

மக்களின் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற உறுப்பினர், இத்தனை வசதிகளை கேட்பது பலரை முகம்சுளிக்க வைத்துள்ளது. குடிமக்கள் ஓவ்வொரும், மாதம் 10,000 ரூபாயை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மக்களின் பிரதிநிதிகள்; சற்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts