TamilSaaga

“கட்டாய தடுப்பூசி போட நாங்கள் பன்றிகள் கிடையாது” – பிரான்சில் அதிகரிக்கும் போராட்டம்

பிரான்சில் கட்டாய தடுப்பூசி மற்றும் தடுப்பூசிக்கான பாஸ்போர்ட் திட்டத்துக்கு எதிராக மக்கள் பல இடங்களில் அணிதிரண்டு போராடி வருகிறார்கள்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அரசு கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.

இவை அறிவிக்கப்பட்ட நாள் முதலே பிரான்ஸ் மக்கள் நாட்டை போராட்ட களமாக மாற்றியுள்ளனர். இதற்கு எதிராக பல்வேறு கோஷங்களையும் பதாகைகளையும் வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துவங்கி மர்சேய், லியோன், மான்ட்பீலியர், நான்டெஸ் மற்றும் டூலூஸ் போன்ற ஏறத்தாழ 150 நகரங்களில் மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

நாட்டில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றாக அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் “நாங்கள் பன்றிகள் கிடையாது”, “தடுப்பூசி போட வேண்டுமா வேண்டாமா என்பது எங்கள் விருப்பம்” போன்ற வாசகங்களோடு பதாகைகள் ஏந்தி போராடி வருகின்றனர்.

இதனை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையால் புகை பயன்படுத்தப்படுவதால் நாடெங்கும் புகையும், போராட்டமுமாக உள்ளது.

Related posts