TamilSaaga

அன்று ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.. ஆனால் இன்று மைனா வைத்திருக்கும் காரின் விலை எத்தனை லட்சம் தெரியுமா?

முதலில் சினிமா பிரவேசம் அடைத்துவிட்டு பின் சின்னத்திரையில் நுழைந்து கலக்கி இறுதியில் தாங்கள் நினைத்ததொரு நல்ல வாழ்வை வாழ்கின்ற நடிகர் நடிகைகள் பலருண்டு தமிழ் சினிமாவில். அந்த வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி இன்று ஊர் போற்றும் அளவிற்கு வளர்ந்துள்ள நடிகை தான் மைனா நந்தினி

கடந்த 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படம் என்றபோது இவர் மக்களுக்கு பரிச்சயமானது 2010ம் ஆண்டு அருள்நிதி மற்றும் சுனைனா நடிப்பில் வெளியான வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான். சினிமாவில் சாதிக்க நிறமோ, குடும்ப பின்னணியோ தேவையில்லை என்பதை நிரூபித்த நடிகை இவர்.

அவ்வப்போது சினிமாவில் தோன்றிவந்த இவருக்கு, சிவகார்த்திகேயனின் நம்ம வீடு பிள்ளை திரைப்படம் ஒரு திருப்புமுனையே. உலக நாயகனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் ஆசை மனைவி பாத்திரத்தில் நடித்து, எந்த கேரக்டராக இருந்தாலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை என்ற போதும், இவர் சின்னத்திரையில் டாப் செலிபிரிட்டி என்றே கூறலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு இருக்கும். ஒரு கட்டத்தில் மைனாவுக்கு கார்த்திக் என்பவருக்கு திருமணம் நடக்க அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை.

மைனாவின் முன்னாள் கணவர்

மைனா கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தார், ஆனால் கார்த்திக்குக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் பலரை ஏமாற்றி காசு வாங்கியதாகவும் கூறப்பட, கார்த்திக் கடந்த 2017ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவருடைய இறுதி சடங்கிற்கு கூட மைனா குடும்பத்தார் அவரை அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

யோகேஷ் மீது காதல்

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகை மைனா மற்றும் சின்னத்திரை நடிகர் யோகேஷ் ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இறுதியில் அது திருமணத்திலும் முடிந்தது, சில மாதங்களுக்கு முன்பு மைனா மற்றும் யோகேஷ் ஜோடிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. இன்று இருவரும் நல்ல முறையில் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில், ரூ.11 லட்சம் மதிப்புள்ள ஒரு அசத்தலான காரை வாங்கி தங்கள் மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் மைனா.

மைனா நந்தினி இன்ஸ்டாகிராம் பதிவு

உண்மையில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தனது பயணத்தை துவங்கியவர் 13 ஆண்டுகளில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளது அவரது அயராத உழைப்பை பிரதிபலிக்கிறது..

வாழ்த்துக்கள் மைனா!

Related posts